[X] Close

ஹாட் லீக்ஸ்: ஆசி வாங்கிய ஈபிஎஸ்... ஆரத்தி காட்டிய ஓபிஎஸ்..!


eps-ops-jayalalitha-memorial

  • kamadenu
  • Posted: 18 May, 2018 10:05 am
  • அ+ அ-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவு மண்டபம் கட்ட கடந்த 7-ம் தேதி அடிக்கல் நாட்டினார்கள். அமைச்சர் பெருமக்கள் புடைசூழ நடந்த இந்நிகழ்வுக்கு முதல்வரும் துணை முதல்வரும் ஒன்றாகவே வந்தார்கள். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முதல்வர் உள்ளிட்ட விஐபி-க்கள் கடைசி நிமிடத்தில் வருவதுதான் வாடிக்கை. ஆனால், இந்த நிகழ்வில் ஓபிஎஸ்-ஸும் ஈ.பிஎஸ்-ஸும் காலை ஆறே முக்கால் மணிக்கே வந்து ஒன்பதரை மணிவரைக்கும் வியர்வையில் நனைந்து காத்திருந்தார்கள். பூஜையில் வைத்த செங்கல்லை தாம்பாளத்தில் வைத்து அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் தொட்டு வாங்கினார் ஈபிஎஸ். இன்னொரு பக்கம், ஓபிஎஸ் தன் பங்கிற்கு தீப ஆரத்தித் தட்டைத் தூக்கிக் காட்ட, அனைவரும் கண்களில் ஒத்திக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இன்னொரு விஐபி (ஜெ.தீபா) மாதவன்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close