[X] Close
 

ஹாட் லீக்ஸ்: ஆர்ப்பரித்த முதல்வர்... அமைதிகாத்த துணை முதல்வர்..!


hit-leaks-about-ops-eps

  • kamadenu
  • Posted: 16 May, 2018 12:29 pm
  • அ+ அ-

அவசரமாகக் கூடிய ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், ஏகத்துக்குக் காரசாரமாம்! “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நமக்கு துரோகம் செய்துவிட்டது” என்று முதல்வர் சொல்ல, இன்னொரு அமைச்சர் எழுந்து, “செய்தது என்ன... இன்னமும் செய்வார்கள். பாஜக-வுடன் நமக்கு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்” என்று சொன்னாராம். அப்போது குறுக்கிட்ட மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஆளுநரை நாம் காப்பாற்ற முயற்சிப்பதாகச் சொல்வதுஉண்மைதானா?” என்றாராம். அதற்கு, “எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் சொல்ல... அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தாராம் துணை முதல்வர்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close