[X] Close
 

ஹாட் லீக்ஸ்: ரஜினியின் அமெரிக்கப் பயணம் ஏன்?


rajinikanth-visits-us

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Apr, 2018 11:14 am
  • அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றிருக்கிறார். நமக்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கும் தகவல் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் என்பதுதான்.

ஆனால், அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை என்னவோ வெறும் 2 நாட்கள்தான் நடைபெறுகிறதாம். அப்படியென்றால் இந்த விசிட்டுக்கு பின்னணியில் இன்னும் ஒரு வலுவான காரணமும் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம், அப்படியான காரணம் இருக்கிறது என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நாளை (25-ம் தேதி) நடக்கும் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவரோ அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்த கையோடு ரஜினிகாந்த் கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார். அங்கிருந்து என்ன கட்சிப் பணி என்கிறீர்களா? கட்சிக்காக ஒரு பிரத்யேக வெப்சைட், அப்புறம் கட்சிக்கான ஆப் ஆகியன தயாராகிறதாம். அதில், மக்கள் தங்கள் புகார்களை, குறைகளைப் பதிவு செய்யும் வகையில் அம்சங்கள் சேர்க்கப்படவுள்ளதாம். கட்சியின் இணையதளத்தை கையோடு இருந்து மேற்பார்வையிட்டு தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கவே அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்கிறது தகவல். இந்தப் பணியுடன் மருத்துவப் பரிசோதனையையும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் ரஜினி.

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்னு' பஞ்ச் டயலாக் பேசுற மாதிரி டிஜிட்டல் இந்தியாவில் பிரத்யேக வெப்சைட்டுடன் அரசியல் களம் காணவிருக்கிறார் ரஜினிகாந்த்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close