[X] Close

ஹாட் லீக்ஸ்: படபட அண்ணியார்!


premalatha-hot-leaks

  • kamadenu
  • Posted: 18 Apr, 2018 12:02 pm
  • அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பேசிய பிரேமலதா, “உங்கள் போராட்டத்தை மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை. கேப்டன் டி.வி. மட்டுமே ஒளிபரப்புகிறது” என்று படபடத்தார். இதைக் கேட்டு மற்ற மீடியா பிரதிநிதிகள் முணுமுணுக்க, அவர்கள் மீது தேமுதிக-வினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக  பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல் துறை. பதிலுக்கு, தேமுதிக-வினரும் ஒரு புகாரை எழுதி நீட்ட, ஊடகவியலாளர்கள் 10 பேர் மீதும் வழங்குப் போட்டு சம்மன் செய்தார்கள்.  ‘கேப்டன் டி.வி-யைத்  தவிர வேறெதையும் அந்த அண்ணியார்  பார்க்கிறதில்லை போலிருக்கு. பேப்பரும் படிக்கிறதில்லை போலிருக்கு’ என்று புழுங்கிவிட்டார்கள் உள்ளூர் ஊடகத்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close