[X] Close

சங்கி - மங்கி மீட்டிங் 


sangi-mangi-meeting

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 18:51 pm
  • அ+ அ-

'அண்ணே வணக்கம்ணே, இப்படி தலையெல்லாம் கலைஞ்சிருக்கு, ஏதாவது அடிதடியாண்ணே'. 

'இல்லடா மங்கி சிம்பு பிரஸ்மீட்டுக்கு போனேன், கடைசி வரை என்ன சொன்னார்னு மண்டைய போட்டு குழம்பிப் போச்சுடா'.

'என்ன, ஜெயலலிதா ஆவின்னு சொன்னாராமேண்ணே'.

'ஆமாடா சுத்தி வளைச்சு சூனியக்கதை ஒண்ணு சொன்னார். போராட்டத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரான்னே தெரியாத அளவுக்கு ஒரு மாதிரி பேசிட்டாருடா? அவங்க அப்பா பேசினா கூட ஓரளவு புரிஞ்சுக்குவேன், இது என் கேரியருக்கே சவாலா போச்சுடா.'

'விடுங்கண்ணே விஷாலு கூட்டத்த கூட்டிட்டாருன்னு கோபத்துல அவரு பிரஸ்ஸ கூப்பிட்டு ஏதோ சொல்லிட்டாரு. அதை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு, அப்புறம் மவுன ராகத்துக்கு போனீங்களா?'

'டேய் மங்கி அது மவுனப் போராட்டம்டா?'

'என்னமோண்ணே அதிலும் நடிகர்கள் இதிலும் நடிகர்களா அதான் குழப்பமாயிட்டேன். விஷயத்துக்கு வாங்கண்ணே போராட்டம் எப்படி இருந்துச்சு.?'

'போராட்டம் நல்லா தான் இருந்தது. நேத்தே நான் சொன்னேன் அல்லவா? யாராவது எதையாவது பேசி வைக்கப்போகிறார்கள் என்று யோசிச்சிக்கிட்டிருக்காங்க என்று? அதுக்கு நாசர் விடை கண்டுபிடிச்சுட்டாரு. யாரும் சாப்பிட மாட்டாங்க என்பதை பேசமாட்டாங்கன்னு மாத்திட்டாரு.'

'அண்ணே ஐபிஎல்லுக்கு எதிரா எண்ணண்ணே இவ்வளவு எதிர்ப்பு, இது உலகம் முழுதும் பார்க்கிற மேட்ச் அல்லவா அதான் ஏண்ணே ஐபிஎல் நடக்காதா?'

'10-ம் தேதி மேட்ச் மட்டும் சென்னையில் நடக்கும். மத்த மேட்ச்சை வெளி மாநிலத்தில நடத்த யோசிச்சிக்கிட்டிருக்காங்களாம்.இதுக்கு நடுவுல ஐபிஎல்காரங்க டெல்லி பாதுஷாவை பிடிச்சுட்டாங்களாம். அங்கிருந்து கியாரே சிட்டிங்கா? ஒழுங்கா ஐபிஎல் நடக்கணும் பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டாங்களாம். அய்யாவே சொன்னதால இப்ப போலீஸாருக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போயிருக்காம். நாளை எப்பாடு பாட்டாகிலும் ஐபிஎல்லை நடத்தி முடிக்கணும்னு போலீஸ் அதிகாரிகள் மும்மூரமாக இருக்காங்களாம்.

அதற்காக 10-ம் தேதி மேட்ச் நடந்தால் அதுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடாம். கருப்புச்சட்டை போட்டு வரக்கூடாது, செல்போன் அனுமதி இல்லை, அட்டை, பதாகைகளுக்கு அனுமதி இல்லை இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடாம். இந்த ரணகளத்திலேயும் ஒருத்தன் ஐபிஎல் டிக்கெட்ட ரெண்டு மடங்கு விலைக்கு வித்து மாட்டிக்கிட்டான், இது எப்படி இருக்கு.?'

'அண்ணே நான் ஒண்ணு சொல்லட்டா இவங்கள்லாம் இப்படிப் போராடிக்கிட்டிருக்காங்க கோவையில ஒரு தியேட்டர்ல ஷகிலா வாரம் கொண்டாடுகிறார்கள் இதுக்கு என்ன சொல்றீங்கண்ணே.'

'டேய் உன் புத்திக்கு இது மாதிரி தான் தோணும் இதில கருத்து வேற கேக்குறியா?'

'ரொம்ப நாளைக்கு அப்புறம் கேப்டன் தோனி மீண்டும் சிஎஸ்கேக்கு வரும்போது இப்படி ஒரு பிரச்சனையா?'

'மங்கி கேப்டன் என்றாலே பிரச்சினைதான். மிஸஸ் கேப்டன் என்றால் அதைவிட பிரச்சினை என்ன சொல்றீங்கண்ணே தோனி மனைவி அப்ராணியாச்சே?'

'நான் அவங்கள சொல்லலடா பிரேமலதா அண்ணியாரை சொன்னேண்டா.'

'அவங்க தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு போய் போராட்டக்காரர்களை வாழ்த்தப்போனாங்க. அங்க போய் உங்கள் அனைத்து பிரச்சினைக்கும் நாங்க தான் துணை நிற்போம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு பேசியிருக்காங்க. அதற்கு பிறகு மீடியாக்காரங்க மோசம்னு பேசி தொண்டர்களை உசுப்பேற்றி ஒரே அடிதடி. இப்ப பத்திரிகைகாரங்க கொடுத்த புகாரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்காங்களாம்.'

'ஏண்ணே வழக்கமா கேப்டன் தானே மீடியாவை வம்பிழுப்பாரு. இப்ப என்ன அண்ணியார் வம்பிழுக்கிறாங்க'

'ஆமாம்டா நேற்றுகூட ஸ்டாலின் கூட்டத்துல ரெண்டு மீடியாக்காரங்க அடிபட்டாங்க. இது இப்ப அடிக்கடி வாடிக்கையாகி வருது மங்கி. போலீஸ்காரங்களும் மீடியா மேலதான் பாய்கிறார்கள் என்னத்த சொல்றது.'

'போலீஸ்னு சொன்னதும் தான் ஞாபகம் வருதுண்ணே வடபழனியில அர்ச்சகர் தான் தனது மனைவியைக் கொன்னுட்டு நாடகமாடியிருக்காருன்னு கைது பண்ணியிருக்காங்கலாமே.'

'ஆமாடா சில தடயங்கள் வலுவா கிடைச்சு கைது பண்ணிட்டாங்கடா? அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் முதல் நாள் கொலை நடந்ததும் மோப்ப நாய் வந்துச்சே அது ஏண்ணே அவங்க கணவரை அன்னிக்கே கவ்வி பிடிக்கல.'

'அதாண்டா எனக்கு சந்தேகமா இருக்கு இதுவரைக்கும் அனைத்து சம்பவங்களிலும் மோப்ப நாய் வந்தது தெருமுனை வரை ஓடி நின்றதுன்னுதான் போடுகிறார்கள் கொலையாளியை கவ்விப் பிடிச்ச மாதிரி கேள்விப்பட்டதே இல்லடா?’

'ஏண்ணே எதாவது விவகாரமாண்ணே'

'நாய் பராமரிப்பில் சில விஷயங்கள் இருக்குன்னு நண்பர் வரச்சொன்னார் ஒரு நாள் போய் என்ன விபரம்னு கேட்டு உனக்கு சொல்றேன்.'

'ஏண்ணே இந்த கருப்புக்கொடி மேட்டர் என்ன ஆகும்ணே.'

'அதை நினைச்சுத்தாண்டா போலீஸ் உயரதிகாரிகள் எல்லாம் ரத்தக் கொதிப்புல இருக்காங்கலாம். கருப்புக்கொடி மட்டுமில்ல சட்டையும் போடுங்கன்னு தலைவர்கள் சொல்லிட்டாங்க. விமானத்தில் பறந்தாலும் பிரதமருக்கு கருப்புக்கொடின்னு சொல்லிட்டாங்க, போலீஸ் அதிகாரிகள் கைய பிசைஞ்சுகிட்டு நிக்கிறாங்க.'

'ஏண்ணே காட்டினா காட்டட்டுமே இப்ப கவர்னருக்கு காட்டலையா. அவர் கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருன்னு போகலையா பிரதமருக்கு மட்டும் என்ன வந்துடப் போகுது.'

'டேய் மங்கி இது சர்வதேச ராணுவ விழா. உலகத்துல இருக்கிற மீடியாக்காரனெல்லாம் வருவாண்டா புரிஞ்சுக்க.'

'இதுல அதிகாரிங்க இன்னொரு விஷயத்தையும் ஆலோசிக்கிறார்களாம். ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யலாமா? என்ற யோசனை உள்ளதாம். முதலில் ஐபிஎல்லை முடிப்போம் பின்னர் அதை யோசிப்போம் என்று முடிவெடுத்துள்ளதா பேசிக்கிறாங்க.'

'ஏண்ணே இப்படி ஸ்டாலினை ஹீரோவாக்குவதற்கு பேசாம வாரியத்தை அமைச்சிடலாமேண்ணே'

'போடா இங்க ஹீரோ ஆக்குவதா பிரச்சினை? அவங்களுக்கு கர்நாடகாவுல ஜீரோ ஆகக்கூடாது என்பது தானே பிரச்சினை.'

'ஏண்ணே சத்யராஜை தமிழிசை அக்கா ஏதோ மிரட்டுனாங்கன்னு கேள்விப்பட்டேனே?'

'சத்யராஜை மட்டுமில்ல ரஜினியையும் சேர்த்து மிரட்டியிருக்காங்க. நேற்று அவங்க கட்சி பொதுக்கூட்டம் அதில தான் சத்யராஜை ஒரு பிடி பிடிச்சிருக்காங்க.'

'எண்ணண்ணே சொன்னாங்க?'

'சத்யராஜ் ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று சொன்னாரு, அதற்கு ராணுவம் எதற்கு உங்களுக்கு ரெய்டு வந்தால் போதாதா என்று தமிழிசை கேட்டிருக்கிறார். இது சத்யராஜுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போலத்தான் தோணுது.'

'ரஜினிக்கு என்னண்ணே சொன்னாங்க?'

'ரஜினி இன்று பேசுவதைப் போல் தமிழ் மக்கள் 40 வருடத்துக்கு முன் பேசி இருந்தால் ரஜினி இங்கு சூப்பர் ஸ்டாரா வந்திருக்க முடியுமான்னு கேட்டாங்க. அப்ப ரஜினி பாஜக பி டீம் இல்லையாண்ணே? டேய் உனக்கு எதாவது தகவல் சொல்லலாம்னு வந்தா இப்படி ஏடாகூடமா கேட்பியா?'

'கோச்சுக்காதீங்கண்ணே சொல்லுங்க.'

'அடேய் பள்ளிக்கல்வித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதுதான் இப்ப லேட்டஸ்ட் டாபிக். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஒருத்தர் ஆதாரத்தோட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்ப அவங்க பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அங்கிருந்து தகவல் ஓடுது.

அது மட்டும் இல்லடா புதுசா 4 இணை ஆணையர்களை பள்ளிக் கல்வித்துறையில் மாற்றி இருக்காங்களாம். எதுக்கு தெரியுமா? எதுக்குண்ணே? எல்லாத்தையும் உனக்கு இன்னைக்கே சொல்லணுமா? நாளைக்கு சொல்றேன்.'

வருவோம்ல.... 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close