[X] Close
 

வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை ‘மிஸ்’ பண்ணாதீங்க...


cucumber-medical-tips

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 16 Mar, 2018 16:23 pm
  • அ+ அ-

வெயில் காலம் தொடங்கிவிட்டது. வெயிலில் இருந்து காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர். ‘வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வெயிலில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு. வெள்ளரிக்காயின் பயன்கள் பற்றி அவர் அளித்த தகவல்கள் இதோ...

வெள்ளரிக்காயைப் பொறுத்தவரை, ‘நாட்டு வெள்ளரிக்காய்’ என்று சொல்லக்கூடிய குட்டி குட்டி வெள்ளரிக்காய்கள் தான் அதிக மருத்துவப்பயன் கொண்டவை. உடல் சூட்டைத் தணித்து, இயல்பான உடல் வெப்பநிலையில் நம்மை வைத்திருக்கும் திறன் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

அத்துடன், நமக்குத் தேவையான நீர்ச்சத்தையும் வெள்ளரிக்காய் மூலமே பெற்றுக் கொள்ளலாம். எனவே, கோடை காலத்தில் வெள்ளரிக்காயை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற காலங்களில் கூட நீண்டதூர பயணம் மேற்கொள்பவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.

வெயில் காலத்தில் சருமம் வறண்டு விடுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வறண்ட சருமம் நீங்கி, பொலிவு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தினமும் வெள்ளரிக்காய் கொடுத்து வந்தால், வெப்பத்தால் ஏற்படும் அம்மை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.

தேவையான அளவு தண்ணீர் பருகாத காரணத்தால், பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கும் சிறுநீர்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வெள்ளரிக்காய் சிறந்த அருமருந்து.

வெயிலில் சென்று திரும்பிய பிறகு, வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி இரண்டு கண்களின்மீதும் 15 நிமிடங்கள் வைத்தால் சூடு நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close