[X] Close

உங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை.. ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்களேன்


best-way-to-curb-lifestyle-diseases

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Mar, 2018 13:33 pm
  • அ+ அ-

மாறிவரும் கால சூழலில் வெளிநாடுகளில் இருந்து ஸ்வீகரிக்கப்படும் உணவுப் பழக்கங்களாலும், நம் நாக்கை சுவைகளுக்கு அடிமைப்படுத்திவிடுவதாலுமே பல்வேறு லைஃப்ஸ்டைல் நோய்கள் வருகின்றன.


இத்தகைய லைஃப்ஸ்டைல் நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் (ஐஎம்ஏ) ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது. இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பான ஐஎம்ஏ-வில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இருக்கின்றனர். 


இக்கூட்டமைப்பு வலியுறுத்தும் மந்திரம் இதுவே.. "உங்கள் சாப்பாட்டில் உப்பு, இனிப்பு, எண்ணெய்.. இவற்றை ஒரு ஸ்பூன் குறைத்துக்கொள்ளுங்கள்".
அதிகப்படியாக உப்பு, இனிப்பு, எண்ணெய் உட்கொள்வது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றனவாம்.
எனவேதான், இத்தகைய லைஸ்டைல் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நபரும் அன்றாடம் தான் பயன்படுத்தும் அளவில் இருந்து ஒரு ஸ்பூன் அளவேனும் உப்பு, இனிப்பு, எண்ணெய்யை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


இதை அரசாங்கத்திடமும் வலியுறுத்த இந்தக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி உணவு தொழிற்சாலைகளில் உப்பு, சர்க்கரை அளவை குறைக்க அரசு உத்தரவிட வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று ஐஎம்ஏ-வின் சிகிடி (கிரானிக் கிட்னி டிசீஸ்- CKD) கட்டுப்பாடு திட்டத்தின் சேர்மன் மருத்துவர் உமேஷ் கன்னா கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, அதிகப்படியாக உப்பு உட்கொள்வதே உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.


கிரானிக் கிட்னி டிசீஸ்-யால் (CKD) பாதிக்கப்படும் 40% பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் 60% பேரும் அதிகமாக உப்பு, இனிப்பு உணவில் சேர்த்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.
அதேபோல் அதிக அளவில் எண்ணெய் உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படுவதுடன் அது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
உப்பு, இணிப்பு, எண்ணெய்யே பெரும்பாலான லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு வித்தாக இருக்கிறது.


உலக சுகாதார மையத்தின் பரிந்துரை என்ன தெரியுமா?
உலக சுகாதார மையமானது ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி உப்பு, 6 முதல் 8 தேக்கரண்டி அளவு இனிப்பு, 4 தேக்கரண்டி அளவு எண்ணெய் என்ற அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்கிறது.
ஆனால், இந்தியர்களோ ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி உப்பு, 16 முதல் 20 தேக்கரண்டி சர்க்கரை, 8 தேக்கரண்டி எண்ணெய் என்ற அளவில் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டுகிறது.
ஐஎம்ஏ ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜெயேஷ் லீலே கூறும்போது, "உணவுத் தொழிற்சாலைகள் தங்கள் பதார்த்தங்களில் உப்பின் அளவு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, சர்க்கரையின் அளவு எவ்வளவு, எண்ணெய் எவ்வளவு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த வலியுறுத்தவுள்ளோம். இத்தகைய கெடுபிடிகளை அரசு நிர்ணயித்தால் நிச்சயமாக பொதுமக்களின் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதோடு மக்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த முடியும்" என்றார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close