[X] Close

ஆஸ்துமா நோயும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களும்


5-truths-you-should-know-about-asthma

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Mar, 2018 15:50 pm
  • அ+ அ-

சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம் இப்படியான வாழ்வியல் சார்ந்த தவறுகள் அதிகரித்து வருவதால் அன்றாடம் அதிகமானோரை பதம் பார்க்கும் நோயாகிவிட்டது ஆஸ்துமா.
லைஃப்ஸ்டைல் நோயாகிவிட்ட ஆஸ்துமா குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கியத் தகவல்கள் இருக்கின்றன.
புனேவில் உள்ள நெஞ்சக நோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் சுந்தீப் சால்வி அந்த 5 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கியுள்ளார்.

ஆஸ்துமா ஒரு பரம்பரை நோய்..

ஆஸ்துமா ஒரு பரம்பரை நோய். ஆஸ்துமாவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தாவிட்டாலும்
ஸ்கீஸோஃப்ரீனியா எனப்படும் தீவிரமனநோய்க்குப் பின்னர் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் பரம்பரை நோய் ஆஸ்துமாவே. அடாபி (Atopy) என்பது ஆஸ்துமா, அலர்ஜிக்
ரைனிடிஸ், எக்ஸிமா, மைக்ரெய்ன் (ஒற்றைத் தலைவலி) ஆகியனவற்றின் தொகுப்பு. இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று குடும்பத்தினரில் ஒருவருக்கு இருப்பின் அது அடுத்த தலைமுறையினருக்கு ஆஸ்துமாவைக் கடத்தவல்லது. இப்படி புரிந்துகொள்ளுங்கள், பாட்டிக்கு அலர்ஜிக் ரைனிடிஸ், தாய்க்கு எக்ஸிமா பாதிப்பு இருந்தால் குழந்தைக்கு நிச்சயம் ஆஸ்துமா ஏற்படும்.

மன அழுத்தம் ஒரு முக்கியக் காரணம்..
பொதுவாக காற்று மாசுடன் சம்பந்தப்படுத்தப்பட்டாலும் மன அழுத்தம் காரணமாகவும் ஆஸ்துமா பரவும். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்நோக்கியிருப்பதால்
ஏற்படும் மிகை உணர்ச்சி, பரீட்சை பயம், மேடை பயம் என எந்த மிகை உணர்ச்சியும் அழுத்தமாக மாறி அது ஆஸ்துமாவை ஏற்படுத்தும். நெருங்கிய நபரின் மறைவு,
விரும்பியவருடனான பிரிவுகூட ஆஸ்துமாவை ஏற்படுத்தக் கூடியது. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது, சுவாசப்
பாதையில் எரிச்சல் ஏற்படும். இதனால், ஆஸ்துமா உண்டாகும்.
 
வீட்டுக்குள் இருக்கும் மாசும் விடாது..
உங்கள் வீட்டுக்குள் சிற்சில மாற்றங்களைக் கடைபிடித்தாலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். கொசுமருந்துகள், வாசனை திரவியங்கள், தரையை சுத்தப்படுத்தும்
மருந்துகள், அடர்த்தியான திரைகள், தரை விரிப்புகள் ஆகியன ஆஸ்துமவை அதிகரிக்கும். இவற்றின் பயன்பாட்டை நாம் தவிர்த்தாலே ஆஸ்துமாவை ஓரளவு
கட்டுப்படுத்தலாம். மிக முக்கியமாக உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை வீட்டில் செய்யாதீர்கள்.

உணவும் முக்கியம்:
பழங்கள், காய்கறிகள் எப்போதுமே சுவாசப்பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். ப்ரோபயாடிக் உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் ஆஸ்துமாவில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். நொறுக்குப் பண்டங்களில் உள்ள ரசாயன வேதிப் பொருட்கள் ஆஸ்துமாவை அதிகரிக்கும். எனவே, இத்தகைய உணவுகளை தவிர்க்கவும்.
 
மருந்தே விரோதமாகலாம்..

நாள்பட்ட ஆஸ்துமா அல்லது சரியாக சிகிச்சை அளிக்கப்படாதா ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டோரே இந்தியாவில் இரண்டாவதாக அதிகளவில் உயிரிழக்கின்றனர். ஆஸ்துமா பாதிப்பு உடையவர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றிற்காக கொடுக்கப்படும் சில ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆஸ்துமாவை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஆஸ்பிரின் ஆஸ்துமாவை அதிகரிக்கும். பாராசிடமாலும் ஆஸ்துமாவை அதிகரிக்கும். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவை ஏற்படாதவரை ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்காமல் இருந்தாலே ஆஸ்துமா தொற்று ஏற்படாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close