[X] Close

சிகரெட் பிடித்தால் கண்பார்வையும் காலி: புதிய ஆய்வில் தகவல்


  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 18:16 pm
  • அ+ அ-

சிகரெட் பிடிப்பதால் கண்பார்வை பாதிக்கப்படும் என புதிய ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

சிகரெட் பிடிப்பதால் வரும் பலப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சிகரெட் பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அண்மையில், சிகரெட் மூலம் ரத்தத்தில் கலக்கும் ரசாயனத்தால் கண்பார்வை பாதிக்கப்படும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரத்தத்தில்  ‘காட்மியம்’ என்ற ரசாயனம் அதிக அளவில் இருந்தால் கண்பார்வையில் கோளாறுகள் ஏற்படும் என இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. JAMA Ophthalmology-யில் வெளியான ஆய்வுத் தகவலில், குறைந்த, மங்கலான வெளிச்சத்தில் பார்ப்பதும் சிரமமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்கான்சின் பல்கலையின் மேடிசன் ஸ்கூல் ஆஃப் மெடிசினைச் சேர்ந்த ஆடம் பால்சன் கூறும்போது, “கண்பார்வையின் நுண்ணிய சில விஷயங்கள் பாதிக்கப்படும், குறைந்த வெளிச்சத்தில் பூட்டில் சாவியை நுழைப்பது உட்பட பல்வேறு சிறு சிறு கண்பார்வை பிரச்சினைகள் புகைப்பிடிப்பவர்களுக்கு இருந்தால் அதற்குக் காரணம் காட்மியம் என்ற ரசாயனமே. இதனை காண்டாக்ட் லென்ஸ், கண்ணாடி போன்றவை சரி செய்ய முடியாது” என்றார்.

சிலருக்கு இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சாவியை நுழைப்பது சிரமமாக இருக்கலாம், இப்படி சிறுசிறு பிரச்சினைகள் நம் கண்பார்வையை பாதிக்கின்றன, ஆனால் நாம் இவற்றுக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி பெரிது படுத்துவதில்லை.

சிகரெட் இலைசெறிந்த பச்சைக் காய்கள், ஷெல்ஃபிஷ், ஆகியவையில் காட்மியம் என்ற ரசாயனம் அதிகம். காரீயமும் காட்மியமும் விழித்திரையில் சேர்ந்து விடும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள் ரசாயனங்கள் கூட நம் விழித்திரையை பாதிக்கலாம்.

தற்போது ஆய்வு ரீதியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் காட்மியம் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close