[X] Close

உங்களுக்குத் தெரியுமா?- ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காற்று மாசும் காரணமாக இருக்கலாம்


air-pollution-may-affect-your-menstrual-cycle

  • Team
  • Posted: 10 Mar, 2018 13:29 pm
  • அ+ அ-

"உங்கள் பதின்பருவ மகள் இனி வெளியில் செல்லும்போது அவளை மாஸ்க் அணிந்து செல்லச் சொல்லுங்கள். ஏனெனில், காற்றில் கலந்திருக்கும் மாசு அவளது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடும்" என்கிறது ஆய்வறிக்கை ஒன்று.


அமெரிக்காவின் மாசசூசட்ஸ் நகரில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்று மாசு காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/பி.சி.ஓ.எஸ் (PCOS)எனப்படும் சினைப்பைக் கட்டிகள் ஆகிய தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


14 முதல் 18 வயதிலான பதின்பருவ பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காற்று மாசு காரணமாக இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


இதுவரை காற்று மாசு சுவாசக் கோளாறுகளுக்கு மட்டுமே வழிவகுக்கும் என நாம் அனைவரும் நினைத்துவந்த நிலையில், இந்த ஆய்வு காற்று மாசு காரணமாக இனப்பெருக்க உட்சுரப்பியல் அமைப்பும் பாதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்ருதி மகாலிங்கையா, "மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதற்கு காற்று மாசை குறைப்பதே தீர்வாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close