[X] Close

புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ள 5 டிப்ஸ்


eat-healthy-eat-natural-to-keep-cancer-at-bay

  • Team
  • Posted: 09 Mar, 2018 13:30 pm
  • அ+ அ-

புற்றுநோய் என்ற வார்த்தையே பதற்றத்தை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

எல்லா நோய்களுக்குமே வருமுன் காப்போம் விதிமுறை பொருந்தும். அந்த வகையில் புற்றுநோயிலிருந்தும் நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயற்கை உணவு முறை பெரிதும் உதவும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும், உடற்கட்டமைப்பு பயிற்றுனருமான இரோம் ஜைதி.

அவர் கூறும் 5 டிப்ஸை நாமும் பின்பற்றலாமே..


இனிப்பை ஒதுக்கவும்..
உங்கள் உணவில் இனிப்பு இருக்கிறதா? தவறில்லை. ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருக்கிறதா? அப்படி என்றால் அது குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கான காரணியாக இருக்கிறது. குறிப்பாக மார்பகப் புற்றுநோய்க்கு இது வழிவகுக்கும். இனிப்பு இல்லா பண்டங்களை மட்டுமே புசிப்பதும் சிரமமே. அதற்கு மாற்றாக குறைந்த
கலோரி அடங்கிய ஸ்டீவியா போன்ற திரவ வடிவிலான இனிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது, ஸ்டீவியா ரெபாடியானா என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.


மஞ்சளை மறக்காதீர்..
மஞ்சள் இல்லாத சமையலறை இருக்க முடியாது. மஞ்சளுக்கு ஆண்டிசெப்டிக் மருத்துவ குணம் இருப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால், மஞ்சளின் முக்கிய கருப்பொருளான குட்குமின் (curcumin) கேன்சரைத் தடுக்கக் கூடியது. நாள் ஒன்றுக்கு 100 மில்லி கிராமில் இருந்து 200 மில்லி கிராம் வரை மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.


'கோ க்ரீன்'..
பச்சைக் காய்கறிகள். அதுவும் கீரை போன்ற இலை வகை பச்சைக் காய்கறிகள் அடங்கிய உணவே ஊட்டச்சத்து நிறைந்து உணவு. இவற்றில் உள்ள வைட்டமின் சத்துக்களும், மினரல்கள், ஆன்டிஆகிஸ்டன்ட்ஸ், என்சைம்கள் கான்சர் காரணிகளுக்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்ள வழிவகுக்கிறது. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ் என்ற கருப்பொருள் பக்டீரியா, வைரஸ் கிருமிகளுக்கு எதிராக போராடவல்லது. அதுமட்டுமல்லாது கேன்சர் செல்களை மரிக்கச் செய்கிறது. ட்யூமர் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. எனவே, 'கோ க்ரீன்' கொள்கையை நாம் அனைவரும் கடைபிடிப்பது நலம்.


கரும்புச்சாறு எனும் பழரசங்களின் ராஜா..
கோடையில் சிறந்த குளிர்பாணம் கரும்புச்சாறு. இதில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, மான்கனீஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது, காரக்கலவை வகையைச் சேர்ந்தது (alkaline) என்பதால், கேன்சரை வளரவிடாமல் தடுக்கும். கரும்புச் சாறு அருந்துவது மார்பகப் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கவல்லது.


க்ரீன் டீ..
க்ரீன் டீ அருந்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இதயத்தை வலுப்படுத்துவதோடு, அல்சைமர்ஸ் நோய், சர்க்கரை நோய் ஆகியனவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். எலும்பை பலப்படுத்துவதோடு கேன்சரை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும். இதில் நிறைந்திருக்கும் பாலிபீனாலிக் கலவை, ட்யூமர் கட்டிகள் உருவாகாமல்
தடுக்கிறது.

உணவே மருந்து என்பது நாம் எப்போதுமே மறந்துவிடக்கூடாத மருந்து. நாம் என்ன உண்கிறோம் அதில் என்ன சத்துக்கள் இருக்கின்றன, செயற்கை உணவுகளின் நச்சுத்தன்மை எத்தகையது என்பனவற்றை அறிந்துவைத்திருப்பது அவசியம். 
எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள், இயற்கையான உணவை நாடுங்கள் கேன்சரை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close