[X] Close

உஷார்!- தென்னிந்திய மார்க்கெட்டுகளில் சீன லவங்கப்பட்டை


watch-out-next-time-you-spice-up-your-dish

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 15:18 pm
  • அ+ அ-

தென்னிந்திய உணவு சந்தைகளில் சீன லவங்கப்பட்டை அதிகம் புழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த முறை பலசரக்கு வாங்கச் செல்லும்போது நீங்கள் வாங்கும் பட்டை உண்மையான பட்டைதானா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

ஏனெனில், ஜவஹர்லால் நேரு ட்ராப்பிக்கல் பொட்டானிக் கார்டன் மற்றும் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட் மேற்கொண்ட ஆய்வில் தென் இந்திய சந்தைகளில் சீன லவங்கப்பட்டை அதிகம் புழுங்குவதைக் கண்டுபிடித்துள்ளது.

சீன லவங்கப்பட்டையில் கெளமாரின் என்ற நச்சுப் பொருள் அதிகளவில் இருப்பதாக இந்த ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. 
தென்னிந்தியாவில் உற்பத்தியாகும் பட்டை கிலோவுக்கு ரூ.1000 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆனால், சீன லவங்கப்பட்டைகள் கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

JNTBGRI ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் கே.பி.ரமேஷ்குமார், ஆர்.அனந்தகிருஷ்ணன் மேற்கொண்ட ஆய்வில் கேரளாவில் விளைவிக்கப்படும் பட்டையில் கெளமாரின் என்ற மூலக்கூறின் அளவு ஒரு கிலோவுக்கு 143 மில்லி கிராம் என்றளவில் இருக்கிறது. அதேவேளையில் சீன பட்டைகளில் ஒரு கிலோ பட்டையில் 3462 மில்லி கிராம் கெளமாரின் இருக்கிறது. 
கிழக்கிந்திய கம்பெனி சார்பில் 1767-ம் ஆண்டு கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அஞ்சரக்கண்டி எஸ்டேட்டில் விளைவிக்கப்படும் பட்டையில்தான் கெளமாரினின் அளவு மிக மிகக் குறைவாக உள்ளது. அதாவது ஒரு கிலோ பட்டைக்கு 12.3 மில்லி கிராம் அளவில் கெளமாரின் இருக்கிறது.

அண்மையில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலிருந்து லவங்கப்பட்டை கலந்த உணவுப்பொருட்களின் இறக்குமதிக்கு மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்திய சந்தைகளில் அதுவும் குறிப்பாக தென்னிந்திய சந்தைகளில் சீன லவங்கப்பட்டை ஊடுருவியிருப்பது தெரியவந்தது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close