[X] Close

டூத்பேஸ்ட்ல இருக்கும் ட்ரைக்லோசானால் ஆபத்து!- ஆய்வில் தகவல்


toothpaste-contribute-to-antibiotic-resistance

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jun, 2018 10:22 am
  • அ+ அ-

நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், ஹேண்ட்வாஷ் போன்ற பொருட்களில் உள்ள ட்ரைக்லோசானால் நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ட்ரைக்லோசான் என்ற வேதிப்பொருள் நாம் பயன்படுத்தும் பேஸ்ட், ஹேண்ட்வாஷ் போன்ற 2000 பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. 
இந்த வகை ஆன்ட்டிபயாடிக்கை அதிகமான அளவில் பயன்படுத்துவதால் சூப்பர்பக்குகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இவற்றை அதிகமான பொருட்களில் சேர்க்கும்போது இவற்றின் மிச்சம் வீட்டுக்கழிவு நீரில் கலந்து சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வீட்டுக் கழிவு நீரில் நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையானது மருத்துவமனை கழிவுநீரில் இருப்பதைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ட்ரொக்லோசானின் ஆபத்துகளை உணர்ந்த சில நாடுகள் இதன் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. 

அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சோப்பில் ட்ரைக்லோசான் பயன்படுத்துவதை உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை தடை செய்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எந்த ஒரு உணவுப்பொருளிலும் ட்ரைக்லோசான் சேர்க்க தடை இருக்கிறது. டூத்பேஸ்டில் மட்டும் 0.3% அளவு ட்ரைக்லோசான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close