[X] Close

இரவில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் தூக்கம் வராது.. ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்


eating-junk-food-in-night-leads-to-poor-sleep

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jun, 2018 11:10 am
  • அ+ அ-

இரவு நேரத்தில் ஜங்க் ஃபுட் என்ற நொறுக்குத் தீனி வகைகளை உண்ணும் பழக்கமிருந்தால் தூக்கின்மை ஏற்படும் என்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. அதுமட்டுமல்ல உடல்பருமனும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக 3.105 பேரிடம் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 60% பேர் இரவு வேளைகளில் நொறுக்குத் தீனி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள். இந்த 60% பேரில் மூன்றில் இருவர் தூக்கின்மையால் தவிப்பதாகக் கூறினர். தூக்கம் தடைபடுவதால் மீண்டும் நொறுக்குத் தீனி சாப்பிடுவதாகவும் கூறினர். இப்படி இரவு நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோயும் ஏற்படுகிறதாம்.

இந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் "தூக்கமின்மையால் நொறுக்குத் தீனிகள் மீது ஆர்வம் ஏற்படும். இப்படி இரவு நேரத்தில் நொறுக்குத் தீனி உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படும்" என்பதே.

பால்டிமோரில் ஜூன் 2 முதல் 6-ம் தேதி வரை, தூக்கம் தொடர்பாக 32-வது ஆண்டு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், 'Nighttime Snacking: Prevalence and Associations With Poor Sleep, Health, Obesity, and Diabetes' என்ற தலைப்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அறிக்கையில்தான் மேற்கூறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close