[X] Close

உங்கள் தண்ணீரில் பாக்டீரியா இருக்கிறதா?- கண்டுபிடிக்க வந்துவிட்டது கருவி


now-test-your-water-for-bacteria-in-just-1-step

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 May, 2018 12:19 pm
  • அ+ அ-

இதோ.. இந்த ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ்) யூனிட்டை பொருத்திவிட்டால் உங்கள் வீட்டு போர் தண்ணீரில் உள்ள 99.999% பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டுவிடும்... இப்படித்தான் ஆர்.ஓ யூனிட்டுகளுக்கான விளம்பரங்கள் களைகட்டுகின்றன.

ஆனால், அந்த இயந்திரத்திலிருந்து பெறப்படும் சுத்திகரித்தத் தண்ணீரை என்றாவது நாம் சந்தேகப்பட்டிருக்கிறோமா? இல்லை சோதித்துதான் பார்த்திருக்கிறோமா?

ஆனால், மத்திய உப்பு மற்றும் கடல்சார் வேதிப்பொருட்கள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த (CSMCRI) ஆய்வாளர்கள் பாக்டீர்யா சென்ஸார் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் விலை மிகமிகக் குறைவு என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இதன்மூலம் சுத்திகரிக்கப்பட்டதாக சொல்லப்படும் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்களைக்கூட கண்டுபிடித்துவிட முடியும்.

டாக்டர் சவும்யா ஹால்தர் அவரது மாணவி ஸ்வேதா பினோத் குமார் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் தண்ணீரில் பாக்டீரியா கிருமி இருக்கிறதா என்பதை 90 முதல் 120 நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம். 

எப்படி பரிசோதனை செய்வது?
இந்தக் கருவி ஒரு சிறிய டியூபால் ஆனது. அதில் 1 மி.லிட்டர் அளவு தண்ணீரை ஊற்ற முடியும். அதனுள் ஒரு சிறிய குப்பியும் இருக்கும். ஒருவேளை நாம் ஊற்றிய தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றை அந்த குப்பி உள் இழுத்துக் கொள்ளும். அந்தக் குப்பியில் உள்ள கார்பனை பாக்டீரியா உறிஞ்ச ஆரம்பிக்கும். இதனால், தண்ணீரின் நிறம் பிங்காக மாறும். ஒருவேளை நாம் ஊற்றிய தண்ணீரில் பாக்டீரியா இல்லாவிட்டால் தண்ணீர் வெள்ளையாகவே இருந்துவிடும். 90 முதல் 120 நிமிடங்களில் இந்த பரிசோதனையை முடித்துவிடலாம்.

இந்த உபகரணத்தைக் கொண்டு, முனிசிபல் வாரியம் மக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கும் குடிநீரில் பாக்டீரியா இருக்கிறதா என்பதை சோதிக்க உதவும். இதனால், தண்ணீரினால் பரவும் நோய்களை அவ்வப்போது சோதனை செய்து தடுத்துவிட முடியும்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close