[X] Close

நீங்கள் மைக்ரோவேவ் ஓவனில் உணவு சமைக்கிறீர்களா?- அப்படியென்றால் உஷாராக இருங்கள்


heating-food-in-microwave-can-hamper-your-fertility

  • kamadenu
  • Posted: 09 May, 2018 12:44 pm
  • அ+ அ-

மைக்ரோவேவ் ஓவனில் (நுண்ணலை அடுப்பு) சமைக்கப்படும் உணவு உங்களையும் உங்களது பிறவாக் குழந்தைகளையும்கூட மலட்டுத் தன்மை, நீரிழிவு, உடல் பருமன், கேன்சர் போன்ற நோய்களுக்கு ஆளாக்கலாம் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வறிக்கை.

இது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில், பிளாஸ்டிக் கன்டெய்னரில் உணவுப் பொருட்களை வைத்து அதை மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்யும்போது உயர் ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, மூளை நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, பிளாஸ்டிக் கன்டெய்னரில் உணவுப் பொருட்களை சுடவைப்பதால் 95% ரசாயனங்கள் வெளியேறுகின்றன. அதிலும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் அதீத நச்சு நிரம்பிய பிஸ்பீனால் A (bisphenol A) என்ற வேதிப்பொருள் வெளியேறுகிறது. இந்த பிபிஏ நமது ரத்தநாளங்களில் கலப்பதால் மலட்டுத்தன்மை, ஹார்மோன் குறைபாடுகள், பல்வேறு வகையான கேன்சர் ஆகியனவற்றை ஏற்படுத்துகிறது.
பொதுமக்களில் 90% பேரின் உடலில் அதிகளவில் பிஸ்பீனால் A (bisphenol A) என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பீனால் A (bisphenol A) என்ற வேதிப்பொருள் தவிர பிவிசி, டைஆக்ஸின், ஸ்டைரீன் ஆகிய வேதிப் பொருட்களும் உள்ளன.

புதுடெல்லியைச் சேர்ந்த மருத்துவர் நிதாஷா குப்தா கூறும்போது, "பிளாஸ்டிக் பொருட்களுக்குள் வெப்பம் கடத்தப்படும்போது அது அதிகளவில் ரசாயனங்களை வெளியேற்றுகிறது. அந்த ரசாயனங்கள் உணவு பதார்த்தங்களுடன் கலந்துவிடுகிறது. அதை நாம் உட்கொள்வதால் கேன்சர், மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கம் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடல் வழியாக உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளையும்கூட பாதிக்கும் அளவுக்கு மோசமானது. இனப்பெருக்க அமைப்பையே சிதைக்கவல்லது" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close