[X] Close

ஹை ஹீல்ஸ் அணியும் இளம்பெண்களே உஷார்: டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்


high-heels-linked-to-uterine-issues-in-young-girls

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Apr, 2018 18:33 pm
  • அ+ அ-

ஹை ஹீல்ஸ் அணியும் இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கிறது இந்த எச்சரிக்கை ரிப்போர்ட். ஏனெனில் ஹை ஹீல்ஸ் அணிவதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். அதுவும் குறிப்பாக கர்பப்பை சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது.

நீங்கள் அணியும் ஹீல்ஸின் உயர்அம் 5 அங்குலத்துக்கு மேல் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 5 அங்குலத்துக்கு மேலான ஹீல்ஸ் உங்களின் தோற்றப்பாங்கில் மாறுதல் ஏற்படுவதோடு கருத்தரிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

அதேபோல், பூப்பெய்தும் பெண் குழந்தைகள் இவ்வளவு உயரமான ஹீல்ஸ் அணிவார்களானால் அவர்களுக்கும் தோற்றப்பாங்கில் மாறுதல் ஏற்படுவதோடு மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சாகரிகா அகர்வால் பேசும்போது, "இளம் பெண்கள், பூப்பெய்த பருவப் பெண்கள் ஹீல்ஸ் அணிவதால் தோற்றப்பாங்கு மாறும். அவர்கள் கூண் போடும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் பெல்விக் கேவிட்டியில் பாதிப்பு ஏற்படும். கர்பப்பை இயல்பாக இருக்க வேண்டிய இடத்திலிருந்து விலகக்கூடும். அதன் நீள்வெட்டு குறுக்கெட்டு தோற்றம் மாறும். இதனால், அதிக உதிரப்போக்கும், மாதவிடாயின்போது அதிக வலி ஏற்படும். திருமணமான பெண் என்றால் தாம்பத்ய உறவு கொள்ளும்போது அதிகளவில் வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது" என்றார்.

சென்னையைச் சேர்ந்த மகளிர் நோய் சிகிச்சை நிபுணர் அர்ச்சனா எஸ் அய்யநாதன் கூறும்போது, "எப்போதுமே ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மகப்பேறின்போது சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு பிரசவ வலி மிகவும் அதிகமாக இருக்கும். முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன். கர்பப்பை சார்ந்த பல்வேறு கோளாறுகள் ஏற்படும்" என எச்சரித்தார்.

- ஏஎன்ஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close