[X] Close

இந்த வெயில் காலத்தில் வியர்வை துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்


how-to-deal-with-body-odour-this-summer

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Apr, 2018 14:08 pm
  • அ+ அ-

வெயில் வந்துவிட்டது கூடவே வியர்வையும் வழிந்தோடத் தொடங்கிவிட்டது. வெயில் காலத்தில் நம் உடலில் இருந்துவரும் வியர்வை துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார் அழகுக்கலை நிபுணர் ஷேனாஸ் ஹூசைன்.


1. colognes என்ற நறுமன நீரை குளிப்பதற்கு முன் தண்ணீரில் சேர்க்கலாம். இதில் ஆல்கஹாலும் தண்ணீரும் உள்ளது 2 முதல் 5% வரை மட்டும் வாசனை திரவியம் உள்ளது.

2 .குளித்த முடித்த பின் கடைசியாக ஒரு கப் தண்ணீரில் சில சொட்டுகள் colognes என்ற நறுமன நீரை சேர்த்து அதை உடலில் ஊற்றிக்கொள்ளலாம். இதற்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறன் இருக்கிறது.

3. பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்து அதை வியர்வை துர்நாற்றம் ஏற்படக்கூடிய அக்குள், பாதங்கள், கைகள் போன்ற பகுதிகளில் தடவலாம்.

4. உருளைக்கிழங்கை சிறிய வட்டத்துண்டுகளாக வெட்டி அவற்றை வியர்வை துர்நாற்றம் ஏற்படும் பகுதிகளில் பூசிக்கொள்ளலாம்.

5. புதினா இலைகளை குளியல் நீரில் சேர்த்து குளிக்கலாம். அதை சற்று நசுக்கி நீரில் சேர்க்க வேண்டும்.

6 பன்னீர் எனப்படும் ரோஜா இதழ்களால் ஆன திரவத்தை குளியல் நீருடன் சேர்க்கலாம்.

7. ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து அதை அக்குளில் ஒத்தி எடுத்தால் அங்கிருந்து வியர்வை துர்நாற்றம் ஏற்படாது.

8. அதேபோல், வெயில்காலத்தில் தலையில் இருந்து உருவாகும் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து அதை ஒரு கப் தண்ணீருடன் கலக்கி கடைசியாக தலையில் ஊற்றிக் கொள்ளலாம். இதனால், தலை நறுமனத்துடன் இருக்கும். 
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close