[X] Close

நகர்ப்புற இந்தியர்களை சத்தமில்லாமல் தாக்கும் அந்த நோய்: உஷார்


urban-indians-have-brittle-bones-says-study

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Mar, 2018 12:58 pm
  • அ+ அ-

நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களை ஆஸ்டியோபோரோஸிஸ், ஆஸ்டியோபீனியா போன்ற நோய்கள் அதிகம் தாக்குவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. அதுவும் 38 வயதிலிருந்து 68 வயதுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உள்ளவர்களையே இந்த நோய் அதிகம் தாக்குகின்றதாம்.

அது என்ன ஆஸ்டியோபோரோஸிஸ் என்கிறீர்களா? இது ஒரு வகையான எலும்பு நோய். இந்நோய் தாக்கப்பட்டால் எலும்பு அதன் வலிமையை இழக்கும். எளிதில் நொறுங்கும் தன்மையை அடையும். இதனால் குனிந்து நிமிரும்போதோ அல்லது ஓங்கி இருமினாலோகூட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இடுப்பு, மணிக்கட்டு, முதுகு தண்டுவடம் ஆகிய பகுதிகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படும். ஆஸ்டியோபீனியோவும் இதேபோல் எலும்பு நோய்தான். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உண்டு.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் 38 வயது முதல் 68 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 9% பேர் ஆஸ்டியோபோரோஸில் நோயினாலும் 60% பேர் ஆஸ்டியோபீனியா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தமில்லாமல் தாக்கும் நோய்.

ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் இருப்பதை நாம் அவ்வளவு சாதாரணமாகத் தெரிந்து கொள்ளமுடியாது. எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்நோய் இருப்பதே பலருக்குத் தெரியவரும். இதேபோல் ஆஸ்டியோபீனியா என்பது எலும்புருக்கி நோய். இதுவும் சத்தமில்லாமலேயே நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும்.

ஐசிஎம்ஆர் (ICMR) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்த தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் மாதாந்திர இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவக் குழுவானது, "14 முகாம்கள் அமைத்து ஆய்வை மேற்கொண்டோம். ஒவ்வொரு முகாமில் 25 முதல் 30 பேரை ஆய்வு செய்தோம். பெரும்பாலானோர் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு போரோஸிஸ், ஆஸ்டியோபீனியா போன்ற நோய்கள் அதிகம் தாக்கியிருப்பதைக் கண்டறிந்தோம். துரதிர்ஷ்டம் என்னவென்றால், பலருக்கும் தாங்கள் குறைந்த எலும்பு நிகர எடையும் வாழ்கிறோம் என்பது தெரியாமலையே வாழ்கின்றனர். பாலினம், குடும்பத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கின்றனரா? ஆகியனவற்றைப் பொறுத்தே இந்நோய் தாக்குகிறது. மது அருந்துதல், ஸ்டீராய்டு பயன்பாடு ஆகியனவற்றால் இந்நோய் ஏற்படுவது குறைவாகவே இருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close