[X] Close

காசநோய் பாதிப்பில் இந்தியா முதலிடம்: விழிப்புணர்வு தினத்தில் தகவல்


tb-affected-in-india

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு பேரணியில், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் பங்கேற்றனர்படம்: மு.லெட்சுமி அருண்

  • நாகப்பன்
  • Posted: 25 Mar, 2018 16:21 pm
  • அ+ அ-

காசநோய் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக காசநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உலக காசநோய் விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். மருத்துவத் துறை தலைவர் ஆறுமுகபாண்டியன் முன்னிலை வகித்தார். நெஞ்சக நோய் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

பேரணியில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறியதாவது: உலக அளவில் 90 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய் பாதிப்பு இருக்கிறது. காசநோய் பாதிப்பில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 2.75 லட்சம் பேர் இந்நோயால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் 1,500-க்கும் அதிகமானோருக்கு காசநோய் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சென்னம்மாள், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close