[X] Close

தமிழகம் 7 ஆண்டுகளில் காசநோய் இல்லா மாநிலமாகும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 


health-minister-vijaya-bhaskar

விஜயபாஸ்கர் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 14:38 pm
  • அ+ அ-

 

தமிழகம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ் கொடும்பாளூரில் நேற்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிகழ்ச்சிக்கு பின்னர்செய்தியாளர்களிடம் கூறியது:போலியோ இல்லாத மாநிலமாக மாற்றியதைப் போன்று, 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் 99.9 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுகின்றன.

நாட்டிலேயே நிதி ஆயோக்கில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதை முதலிடத்துக்கு கொண்டுவரும் வகையில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, கர்ப்பிணிகளுக்கான இரும்புச் சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய அம்மா தாய்-சேய் நலப் பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு 3-வது மாதத்திலும் 5-வது மாதத்திலும் வழங்கப்பட உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஜெயபாரதி, சுகாதார துணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close