[X] Close

1,000 தமிழக கிராமங்களில் உலக புத்தக தின விழா: அறிவியல் இயக்கம் திட்டம்


world-book-day-international-book-day-ariviyal-iyakkam

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தகப் பிரியர் திட்டத்துக்கான அறிமுக துண்டறிக்கைகளை நேற்று முன்தினம் வெளியிடும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்

  • kamadenu
  • Posted: 20 Mar, 2018 11:49 am
  • அ+ அ-

ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 கிராமங்களில் புத்தக தின விழாவை நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

உலக புத்தக தின விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக, மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் பேசியது:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 கிராமங்களில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட உள்ளது. கருத்தரங்குகள், புத்தக ஊர்வலம், நூல் அறிமுக கூட்டங்கள், எழுத்தாளர்களின் சந்திப்பு, புத்தகப் பரிமாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற உள்ளன. மேலும், புத்தக வாசகர்களுக்காக, ‘புத்தகப் பிரியர்’ எனும் திட்டம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரம் செலுத்தி இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படும்.

இந்த புத்தகங்களை மொத்தமாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்தோ பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் வீடுகள்தோறும் நூலகம் அமைய வாய்ப்பு உள்ளது என்றார்.

மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசியபோது, “புத்தக தின விழா நடத்தப்படும் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று, விழாவின் நோக்கம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து, விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை இவ்விழா நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டையில் 50 கிராமங்களில் விழா நடத்தப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், மாவட்டத் தலைவர் மணவாளன், மாவட்ட செயலாளர் வீரமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகர் உள்ளிட்டோர் பேசினர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close