[X] Close

நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் 


nilgiri-rain-effect

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 10:46 am
  • அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத மத்தியில் வட கிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. இதனால், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை குன்னூர், கோத்தகிரி பகுதிகளி லேயே அதிகளவு பெய்யும். இதனால், உதகை-குன்னூர் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள கேத்தி பேரூராட்சியில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2009-ம் ஆண்டு வட கிழக்கு பருவ மழையால் பெரும் சேதம் ஏற்பட்டதால், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு செல்ல பேரூராட்சி சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சுப்ரமணி மேற்பார்வையில் கேத்தி பேரூராட்சி ஊழியர்கள் முன்னெச் சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதகை-குன்னூர் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள 22 மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மண்,கற்கள் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

செயல் அலுவலர் பி.நட்ராஜ் கூறும் போது, ‘வட கிழக்கு பருவ மழை காலத்தில் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிகம் பாதிக்கும். இதனால், மழையால் பாதிக்கப்படும் மக்கள் தங்க பள்ளிகள் தயாராக உள்ளன.

மீட்புப்பணிகளுக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள், மின்சார ரம்பங்கள் உட்பட உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட 22 கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட 10.42 கி.மீ., வடிகால்வாய் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மழை காலத்தில் வெள்ள நீர் எவ்வித இடையூறுமின்றி வெளியேறி விடும்' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close