[X] Close
 

மகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்


planting-trees-on-births-deaths-drought-hit-pune-village-transforms-itself

  • பாரதி
  • Posted: 18 Jun, 2018 15:58 pm
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது ரன்மலா என்ற கிராமம். 2003-ல் இந்த கிராமம் வறண்ட பூமியாக இருந்தது. ஆனால் இன்று இந்த கிராமத்தைதான் மாநில அரசு மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்க ரன்மலா கிராமம் மாடல் கிராமமாக ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பல கன்றுகள் வளர்ந்து விருட்சமாகிவிட்டன. இதற்குப் பின்னால் இருப்பவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிடி.ஷிண்டே. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கிராமத்தின் வற்ட்சி நிலையை மாற்ற முயற்சியெடுத்தார். அதன் விளைவாக கிராமத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த வீட்டுக்கு மரக்கன்றை பரிசாக அளிப்பதை ஊக்குவித்தார். அதேபோல் துக்கம் அனுசரிக்கும் வீடாக இருந்தாலும்கூட இறந்தவரின் நினைவாக மரக்கன்றை நடும்படிச் செய்தார்.

இப்படியாக 2003-ல் ஆரம்பித்த இந்தப் பணி இன்றளவில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட வழிவகை செய்துள்ளது. 
இது குறித்து மகாராஷ்டிரா மாநில வனத்துறை முதன்மைச் செயலாளர் விகாஸ் கார்கே கூறும்போது, "2003-ல் குழந்தை பிறந்தபோது அளிக்கப்பட்ட மரக்கன்றை தற்போது அந்தக் குழந்தையே பேணும் சூழலுல் ரன்மலாவில் இருக்கிறது.
ரன்மலாவைப் பார்த்தபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது. பிறப்பிற்கு ஜம்ம விருக்‌ஷம், இறப்புக்கு ஸ்ம்ருதி விருக்‌ஷம், பிறந்தவீட்டு சீதனத்துக்கு மஹர்சி விருக்‌ஷம், திருமணங்களுக்கு சுபமங்கல விருக்‌ஷம், சிறப்பான நாட்களுக்கு ஆனந்த விருக்‌ஷம் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் மரக்கன்றுகளை பரிசாகப் பரிமாறிக் கொள்கின்றனர்.

இதே பாணியில் மகாராஷ்டிரா கிராமங்களில் மரக்கன்றுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கிறோம்" என்றார்.
ஒவ்வொரு முக்கியமான நாளுக்கும் மரக்கன்றை பரிசளிப்பது என்பது தனிநபர் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயலர். ஒவ்வோர் ஆண்டும் வறட்சி பாதிக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற மரக்கன்று நடும் சேவை எதிர்காலத்தை பசுமையாக்கும்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close