[X] Close

வெட்டிவேரு வாசம்.. தூசு மாசையும் போக்கும்: சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பு


class-6-chennai-student-uses-native-grass-to-make-herbal-anti-pollution-mask

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jun, 2018 16:56 pm
  • அ+ அ-

சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்வதைப் பார்க்க முடியும். மாசடைந்த காற்றால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் அவ்வாறு கிளினிக்கல் மாஸ்க் அணிந்திருப்பதைக் காணலாம்.

சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் வெட்டிவேர் மூலிகையைக் கொண்டு மாஸ்க் தயாரித்திருக்கிறார்.
வெட்டிவேரின் நாம் அறிந்த நன்மைகள் பல. நிலத்தை வலுவாக்கக் கூடியது வெட்டிவேர். வெட்டிவேர் எண்ணெய் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், நாம் அறியாத ஒன்று வெட்டிவேருக்கு மாசைக்கட்டுப்படுத்தும் சக்தி இருக்கிறது என்பது.
சென்னை ஐஐடி வளாகத்திலுள்ள வனவாணி பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் அருள் ஸ்ரீவஸ்தவாவுக்கு வெட்டிவேரின் இந்த குணநலம் தெரிந்திருக்கிறது.

அருள் ஸ்ரீவஸ்தவாவின் தாயார் ஒரு மருத்துவர். அவரது தாத்தா பொறியாளர். அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் விவசாயம் செய்துவந்தார். அருளின் வீட்டில் எப்போதுமே குடிதண்ணீரிலும் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்யிலும் வெட்டிவேர் சேர்க்கப்படும். அந்த வரிசையில்தான் வெட்டிவேரின் மற்ற குணங்களைத் தேடிக் கண்டறிந்திருக்கிறார் அருள்.
அருளின் பள்ளியில் க்ரீண்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். அதன் மூலம் மாணாக்கர் இயற்கை சார்ந்த செய்முறை வடிவங்களைச் செய்து கொண்டுவர ஊக்குவிக்கப்பட்டது.

அப்படித்தான் ஒருமுறை இயற்கை வழியில் மாசு கட்டுப்பாட்டு முறையை கண்டறிய ஊக்குவிக்கப்பட்டது. வீட்டில் வெட்டிவேர் பயன்பாடு அதிகமிருந்ததால் அதனைக் கொண்டே மாசு கட்டுப்பாடு மாஸ்க்கை வடிவமைத்திருக்கிறார் அருள் ஸ்ரீவஸ்தவா.

வெட்டிவேரை மூங்கில் கம்புகளில் பிண்ணி சாளரங்களில் மாட்டுவதன் மூலம் வெளியில் இருந்து வரும் காற்றை தூய்மைப்படுத்தி வீட்டினுள் அனுப்பப்படுவதை அறிந்த சிறுவன் அருள் அதே பாணியில் வெட்டிவேரை கோத்து அதை நைலான் துணியில் அடைத்து மாஸ்க் செய்திருக்கிறார்.

இதற்காக அருள் ஸ்ரீவஸ்தவாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close