[X] Close
 

நாரையின் அலகில் சிக்கிய ரப்பர் வளையம் லாவகமாக அகற்றம்


ringed-stork-finally-rescued

  • பாரதி
  • Posted: 14 Jun, 2018 10:08 am
  • அ+ அ-

நமது நீர்நிலைகளில் இயற்கை எழில் கொஞ்சினால், நாரையைப் பார்த்து நாராய் நாராய் செங்கால் நாராய் எனப் பாடலாம். ஆனால், இயற்கை தவழ வேண்டிய ஏரி, குளங்கள், நதிகள், கடல், சமுத்திரம் என அனைத்து நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துவருகின்றன. 

கடந்த ஜூன் 8-ம் தேதி சர்வதேச சமுத்திர தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு (2018) சர்வதேச சமுத்திர தினத்துக்கான கோட்பாடாக ஐ.நா., சபை பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமுத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதை முன்நிறுத்தியுள்ளது.

அண்மையில்தான் கடல் ஆமையின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் என்ற செய்தி வெளியானது. அந்த செய்தியின் தாக்கம் அடங்குவதற்குள் நாரை ஒன்று அதன் அலகில் ரப்பர் வளையத்துடன் சிக்கித் தவிக்கும் செய்தி வெளியானது. ஹரியாணாவின் தான்கோட் கிராமப் பகுதியில் பஸாய் எனப்படும் சதுப்புநிலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வனவிலங்கு ஆர்வலர்கள் சிலர் இது குறித்து ஹரியாணா வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கருப்பு நிறக் கழுத்துடன் காட்சியளிக்கும் இவ்வகை நாரை வடகிழக்கு ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன. மீன்கள் தான் இவற்றின் பிரதான உணவு. 

அன்றிலிருந்து அந்தப் பறவையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். ரப்பர் வளையத்தை வெளியே எடுக்க முடியாமல் அந்தப் பறவை தவித்தது. ரப்பர் என்பதால் லேசாக அந்த வளையம் அகன்று கொடுக்கவே அந்தப் பறவையால் தண்ணீர் மட்டுமே அருந்த முடிந்தது. ஆனால், அதனால் சாப்பிட முடியவில்லை. 

இந்நிலையில் வனப் பாதுகாவலர்கல் அந்தப் பறவையை நேற்று மீட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் அதை மீட்டனர். தற்போது அந்தப் பறவை சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது. 

பஸாய் பகுதியில் அண்மையில் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த பாட்டில்களில் இருந்த ரப்பர் வளையம்தான் நாரையின் வாயில் சிக்கியிருக்கிறது. ஒரு நாரைக்கு வாழத் தகுதியில்லாமல் போகும் இந்த நிலம் ஒருநாள் நாம் வாழவும் தகுதியில்லாமல் போகலாம். சுற்றுச்சூழலைப் பேணுவோம் சுகமாய் வாழ்வோம்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m

[X] Close