[X] Close

அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லப் போவது என்ன?


lets-pledge-to-leave-behind-a-greener-world

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jun, 2018 16:24 pm
  • அ+ அ-

உன் குழந்தைக்கு நீ எதை விட்டுச் செல்வாய்? உங்கள் நண்பரிடமோ இல்லை அண்ணன், தம்பி, அக்கா, தங்கையிடமோ ஏன் சுய பரிசோதனைக்காக உங்களிடமேக்கூட இந்தக் கேள்வியைக் கேளுங்கள். 

என் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுப்பேன்.
என் குழந்தைக்கு வீடு, வாசல் சேர்த்து வைப்பேன்.
என் குழந்தைக்காக நிலம் வாங்குவேன்.

நிச்சயம் இதில் ஏதாவது ஒரு பதிலை பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால் யாரேனும் ஒருவர்கூட என் குழந்தைக்கு என் அடுத்த சந்ததிக்கு பசுமையான பூமியை விட்டுச் செல்வேன் எனக் கூறும் வாய்ப்பு குறைவுதான்.

நாம் வாழும் காலம்வரை நாம் சொத்தாகக் கருதும் பட்டியலில் இந்த பூமியும் அதன் பசுமையும் இல்லை. சுயநலமாக நாம் சேர்க்கும் ஒரு சிறிய இடத்திலாவது இந்த பூமியின் பசுமையைப் பாதுகாக்க குறைந்தபட்சம் ஒரு மரமாவது நடுவோம் என நம்மில் எத்தனை பேர் நினைக்கிறோம்?! 

இப்படி பூமி பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வாழும் காலம்வரை இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டிக் கொண்டே இருக்கும் நம்மைப் போன்றோருக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு பாடமாக அமையும்.

ஜூன் 5-ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுதான் இணையத்தில் சற்று வைரலாகிவருகிறது.

கண்களை திறக்கும் காட்சிகள்..
ஒரு அழகான அறை. அந்த அறையில் ஒரு நடுத்தர வயது பெண். அறைக்குள் திடீரென சிலர் வருகின்றனர். அவர்களை வரவேற்று அமரச் செய்கிறார் அந்தப் பெண்.

வந்தவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களே இருக்கின்றனர். கடைசியாக நீங்கள் எப்போது படம் வரைந்தீர்கள் என நினைவு இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகிறார் அந்தப் பெண். ஒரு பெரியவர் நக்கலாக 5-ம் வகுப்பு என்று கூற அறையில் சிரிப்பொலி கிளம்புகிறது.

அந்தப் பெண் எல்லோருக்கும் ஒரு அட்டையும் பேப்பரும் தருகிறார். உங்கள் மனம் விரும்பும் படத்தை வரையுங்கள். எதிரே கிரேயான்ஸ் உள்ளன. அவற்றை சற்று கவனமாகப் பயன்படுத்துங்கள். அடுத்துவரும் குழுவுக்கும் தேவை என்று நாசுக்காக சொல்லிச் செல்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் படம் வரைந்துவிட்டு கிளம்புகின்றனர். பின்னர் அதே அறைக்கு சில சிறுவர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே டாஸ்க்தான். அவர்களுக்கும் படம் வரைய பேப்பர் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக கிரேயான்ஸ் கொடுக்கும்போது சில குழந்தைகள் அதிருப்தியை சின்னச்சிறு முகத்தில்
காட்டுகின்றனர். ஒருவழியாக அவர்களது ஓவியங்களும் தயாராகிவிடுகிறது.

இறுதியாக அந்தப் பெண், முதலில் வந்த குழுவினரையும் அழைக்கிறார். இரண்டு குழுவினர் ஒருவரை ஒருவர் வரவேற்கின்றனர். முதல் குழுவினர் தங்களது ஓவியங்களைக் காட்டுமாறு அந்தப் பெண் கூற.. அத்தனையும் பளிச்சென இருக்க ஒரு சிறுவன் ஸோ நைஸ் என்ற அகலக் கண்களை விரிக்கிறான்.

அடுத்ததாக குழந்தைகளிடம் ஓவியத்தைக் காட்டுமாறு அந்தப் பெண் கூறுகிறார். அவர்களும் படத்தைக் காட்டுகின்றனர்.
அந்தப் படங்களில் பெரும்பாலானவை கருப்பு வெள்ளையாகவே இருக்கின்றன. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஒருவர் எல்லாம் வெறும் கருப்பு வெள்ளையாக இருக்கிறது என்கிறார். இன்னொருவர் ஒருபடி மேலே சென்று குழந்தைகளே நாங்கள் சுயநலமாக இருந்துவிட்டோம் என்கிறார். இன்னொரு பெண் பாதிப்பாதியாக கிரேயான்ஸை உடைத்துவைத்திருந்தால் மற்றொரு குழுவும் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார். ஆனால், கையில் அத்தனை கிரேயான்ஸ் இருந்தபோது யாருக்கும் அதை பொறுப்பாகக் கையாளும் எண்ணம் உதிக்கவில்லை. இத்தனைக்கும் ஒருங்கிணைப்பாளர் வண்ணங்களை கவனமாகக் கையாளவும் என நாசுக்காக எச்சரிக்கிறார்.

இப்படித்தான் நமக்கும் அன்றாடம் எச்சரிக்கைகள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை நாம் கடந்து செல்கிறோம். 

அன்டார்டிகா கண்டத்தில் இருந்து உடைந்து, கடலில் 18 ஆண்டுகளாக மிதந்துவந்த உலகின் மிகப் பெரிய பனிமலை சிறிது சிறிதாக உடைந்தும் உருகியும் காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது. புவிவெப்பமயமாதலே இதற்குக் காரணம். புவி வெப்பமடைய நமது பேராசையே காரணம். நம் சுயநலம் காரணம். இயற்கை வளங்களை உறிஞ்சும் போக்கு காரணம்.

இப்படியாக, இருக்கும் வளங்களை எல்லாம் நாம் சுயநலமாக பயன்படுத்திச் செல்வோம் என்றால் நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு...?

சிந்திப்போம் செயல்படுவோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close