[X] Close

திம்பம் வனப்பகுதியில் வறட்சி உணவுக்காக சாலையோரம் காத்திருக்கும் சிங்கவால் குரங்குகள்


forest-drought-monkey-drinking-water

திம்பம் மலைப்பாதையில் உணவுக்காக சாலையோர தடுப்புச்சுவரில் அமர்ந்துள்ள லங்கூர் இன குரங்குகள்

  • kamadenu
  • Posted: 26 Apr, 2018 11:34 am
  • அ+ அ-

திம்பம் வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள சிங்கவால் குரங்குகளுக்கு, வறட்சி காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து உணவு பெறுவதற்காக சாலையோரங்களில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன சிங்கவால் குரங்குகள். 

குரங்கு வகைகளில் சிங்கத்தின் முகத்தோற்றம் கொண்ட லங்கூர் வகையைச் சேர்ந்தவை, சிங்கவால் குரங்குகள் என அழைக்கப்படுகின்றன. மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட இவ்வகைக் குரங்குகள் மனிதர்கள் நெருங்கினால், விலகி மரங்களில் ஏறிக் கொள்ளும் சுபாவம் கொண்டவையாகும். மரங்களின் உச்சியில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட சிங்கவால் குரங்குகள், வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், காய்கள், விதைகள், இலைகள், பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிங்கவால் குரங்குகள் கணிசமாக வசித்து வருகின்றன. தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் வனப்பகுதியில் இவ்வகைக் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், குரங்குகளுக்கு தேவையான உணவுகளாக பழம், காய்கள் வனப்பகுதியில் போதுமான அளவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சாலையோர தடுப்புச் சுவர்களில் அமர்ந்து வாகன ஓட்டிகள் உணவு தருவார்களா என சிங்கவால் குரங்குகள் காத்திருக்கின்றன. வாகன ஓட்டிகள் வழங்கும் உணவினை சாப்பிடுவதில் குரங்குகளிடையே மோதல் ஏற்பட்டு, அதனால் குரங்குகள் காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘தற்போது உணவு பற்றாக்குறையால், சாலையோரம் காத்திருக்கும் குரங்குகள், வாகன ஓட்டிகள் தரும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது அவற்றின் உடல்நிலை பாதிப்படையும் வாய்ப்புள்ளது. அரிய வகை இனமாக கருதப்படும் சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வேண்டுமெனில், வனப்பகுதியில் பழமரங்களை நட்டு வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கவால் குரங்குகள் அதிகம் காணப்படும் திம்பம் சாலை 12 முதல் 22-வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில், தற்காலிகமாக பழங்களை வாங்கி வனத்துறையினர் உணவாக வழங்க வேண்டும்’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close