[X] Close

தீவிரமடையும் ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்: தீர்வு என்ன? 


protesters-against-sterlite-copper-plant-in-tuticorin

கோப்புப் படம்: தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை

  • இந்து குணசேகர்
  • Posted: 26 Mar, 2018 16:03 pm
  • அ+ அ-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சுற்றுச் சூழலுக்கு, அம்மாவட்ட மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி,  22 வருடங்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சற்றும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் முக்கிய  நகர்வாக கடந்த சனிக்கிழமை வணிகர்கள் அனைவரும் கடையடைப்பில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து மாணவர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என ஆங்காங்கே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுவாக விழத் தொடங்கியுள்ளன. சமூக ஊடகங்களிலும் பலர் இப்போராட்டத்தில் தூத்துகுடி மக்களுக்கு கைக் கொடுக்கும் வண்ணம் பிரச்சாரங்களில் ஈடுபடு வருகின்றனர். 

ஸ்டெர்லைட் ஆலையை ஏன் எதிர்க்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் வாழும்  மக்களுக்கு புற்றுநோய் மற்றும் தோல்  பாதிப்புகளும்  போன்றவை ஏற்படுகின்றன. கடந்த 22 ஆண்டுகளில் அத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெடிவிபத்துகளில் பலியாகியுள்ளனர். மேலும் நச்சுதன்னமை காரணமாக உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி மக்கள் ஏற்கனவே இந்த ஆலை காரணமாக உடல் பாதிப்புகளுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் நிலையில் இந்த விரிவாக்கம் எதிர்ப்புக்கான காரணத்தை மேலும் வலுப்படுத்தியிருக்குறது.

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்களின் போரட்டம் குறித்தும், இந்த விவாகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெற்றிசெல்வனிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது, 

"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை அதன் மீது கந்தக டை ஆக்சடை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முன்பாக பல குற்றச்சாட்டுகள் அந்த ஆலையின் மேல் உள்ளன. குறிப்பாக அந்த நிறுவனம் கனிம வளங்களை பல்வேறு ரசாயன சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டபிறகு இறுதிக்கட்ட பொருள் கிடைக்கிறது. அவ்வாறு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள்தான அந்த நிலப்பகுதிக்கும், சுற்றுசூழலுக்கு, மக்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் புற்று நோய் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை எதிர்த்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மு. வெற்றிச்செல்வன்

இந்தப் போரட்டத்துக்கு முன்னதாக அந்த ஆலையின் வரலாற்றை நாம் பார்க்க வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக அந்த நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மாசுகட்டுபாட்டு வாரியம் விதித்த  நிறைய விதிமுறை மீறல்களில் இவர்கள் ஈட்பட்டிருக்கிறார்கள். ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக சில வருடங்களுக்கும் முன்னர் மதிமுக கட்சி பொதுச் செயலாலர் வைகோ மற்றும் பிற தொழிற்சங்கள் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியது என்றால்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுகட்டு வாரியத்தின் நிறைய விதிமுறைகளை மீறியதற்கான ஆதாரம் உள்ளது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. என்று கூறி இருந்தாலும் பொருளாரதாரத்தை கருத்தில் கொண்டு இத்தகைய தொழிற்சாலைகள் என்பதை கருதி இவை இயங்க அனுமதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் சுற்றுச்சூழலில் அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பை மீண்டும் சரிசெய்து மீட்டெடுக்கும் வகையில் 100  கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் 0% மாசில் ஆலை இயக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 மேலும் இதில்  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கல்ஃப் ஆஃப் மன்னார் உயிரி பல்லூயிர் தன்மைக்கு மிக முக்கியமான பகுதியாகும். பவள பாறைகள் அதிகம் காணப்படும் பகுதி. இதனை தூத்துகுடியில் இயங்கும் பிற தொழிற்சாலைகள் குறிப்பாக ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன இதனால் கடல் வளமும் பாதிப்புக்குள்ளாகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்கள். அப்போது உச்ச நீதிமன்றம் இந்தப் பகுதியை பாதுகாக்க மத்திய அரசுதான் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். இதனை மத்திய அரசுதான் செய்யவேண்டும் நாங்கள் உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டனர். 

இவ்வாறு தொடர் சுற்றுச்சுழல் பாதிப்புகளால் தூத்துக்குடி பாதிக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் முதன்மை காரணமாக ஸ்டெர்லை விளங்குகிறது.  ஆனால் இன்றுவரை தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. ரூ.100 கோடி இழப்பீடையும் இதுவரை வழங்கவில்லை. விதிமுறைகளையும் தொடர்ந்து மீறி வருகிறது.  ஆறுமாதத்துக்கு ஒருமுறை தொழிற்சாலை வெளியிடும் கழிவின் சதவீதம் தொடர்பாக  மாசுக்காட்டுவாரியத்துக்கு வழங்க வேண்டும் ஆனால் இதுவரை ஸ்டெர்லைட் வழங்கவில்லை.

அதே நேரத்தில் தொழிற்சாலை விரிவாக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஈடுபட்டு வருகிறது.
இது அனைத்தும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சரியாக தனது கடமையில் ஈடுபடவில்லை என்பதைதான் காட்டுக்கிறது. மேலும் அப்பகுதி மக்களின் உடல் நலன் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடவும் தமிழக அரசு தவறவிட்டது. இதுதான் தற்போது பெரிய பிரச்சினையாகி உள்ளது. இதற்கெல்லாம் ஒரே முடிவு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான்.


தமிழக அரசு போராடும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று தற்காலிகமாக அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடலாம். மேலும் ஸ்டெர்லைட் காரணமாக வெளிவரும் மாசுகட்டுப்பாட்டை சுட்டிக் காட்டி தமிழக அரசு ஒரு குழுவை அமைக்கலாம். ( மத்திய அரசு ஏற்கவே இதற்காக ஒரு குழுவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது) ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான கூடுதல் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு ஒரு குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

-இந்து குணசேகர்

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close