[X] Close

வெயில், வெப்ப கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு அறிவுரை


hot-heat-advice

கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 13:29 pm
  • அ+ அ-

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில், வெப்பக் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை வெயிலின் வெப்பக் கதிர்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் மற்றும் வெப்பக் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்காக பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும்.

வெளியில் செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணங்களின் போது கையுடன் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும்.

குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர் மற்றும் உடல் நலம் குன்றியவர்களை வெப்பத் தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். வெயில் பாதிப்பினால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மற்றவர் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ணம்) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. கடும் வெயிலில் வெளியில் செல்லக்கூடாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யக் கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக் கூடாது. இந்த அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close