[X] Close

திருப்பூர் மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டில் புதிய வலசை பறவைகள்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி


bird-watchers-happy-over-new-bird-sighting

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 12:35 pm
  • அ+ அ-

நடப்பு ஆண்டில் திருப்பூர் மாவட்டத் துக்கு புதிய வலசை பறவைகள் வருகை புரிந்துள்ளதாக, பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு ஐரோப்பா, சைபீரியா, அமெரிக்கா வின் கிழக்கு கடற்கரை, மத்திய ஆசியா மற்றும் இமயமலைப் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு பறவைகள் வலசை வருவதுண்டு. ஆண்டுதோறும் ஒரே பகுதிகளுக்குதான் வந்து செல்லும். சில புதர் பறவைகளும் வலசை வரும். இந்தியாவுக்கு வலசை வரும் பறவைகளில், ஒரு சில இனங்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமே வந்து செல்லும்.

தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணையில் காணப்பட்ட புதர்ச்சிட்டு.

கடந்த சில ஆண்டுகளில், தமிழ கப் பகுதிகளில் புதிய பறவைகளின் வருகை தொடர்ந்து நிகழ்கிறது. ஓரிரு முறை பூநாரைகள் ஒற்றை யாகவும், 7 முதல் 10 பறவைகள் அடங்கிய சிறு கூட்டமாகவும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வந்து சென்றன. இந்த முறை, தாராபுரத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை அணையில் ஒற்றை பூநாரை (Greater Flamingo) இருப்பதாக தகவலறிந்து, திருப்பூர் இயற்கைக் கழக மற்றும் தாராபுரம் இயற்கைக் கழக பறவை நோக்கர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்' என்றனர்.

இதுதொடர்பாக திருப்பூர் இயற்கைக் கழகத்தின் ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் வெகு அரிதாக பதிவு செய்யப்பட்ட கோணல் மூக்கு (pied Avocet) என்ற கடல் பறவை, இம்முறை கஜா புயல் சீற்றத்தில் திசை மாறி இங்கு வந்துள்ளதாக தெரிகிறது. செந்தலை கூம்பலகன் (Red Headed Bunting) என்ற புதர்பறவையைக் கண்டு மகிழ்ந்தோம். இந்த பறவை, திருப்பூர் மாவட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ளது. இந்த பறவை, மத்திய ஆசியாவில் இனப்பெருக்கம் செய்து அங்கு வாழ்பவை.

அதேபோல், இசபெல்லின் புதர்ச்சிட்டு (Isabeline Wheatear) என்ற பறவையை கண்டு பதிவு செய்தோம். இப்பறவை, தெற்கு ருஷ்ய பகுதியில் வசிப்பவை. புதர்ச்சிட்டு (Common Stonechat) பறவைகள் எண்ணிக்கையில் இருந்ததையும் பதிவு செய்தோம். இவை கிழக்கு ஐரோப்பா மற்றும் சைபீரியப் பகுதிகளில் இருந்து வலசை வருபவை.

இதுபோன்று வலசை வரும் பறவைகள் குறித்த குறிப்புகள், 50 ஆண்டுகளுக்கு மேலாக பரா மரிக்கப்படும் பறவைகள் பற்றிய கையேடுகளில் உள்ளன. இந்தியா வின் பறவையியல் அறிஞர் சலிம் அலி போன்றோரால் தீவிரமாக ஆராயப்பட்டு, எந்தெந்த பறவை கள் எந்த பகுதிகளுக்கு வந்து செல்கின்றன என்று வரைபடங் களாக தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், வட இந்தியா வில் மட்டும் வருகை பதிவுகள் செய் யப்பட்டுள்ளன. இந்த புதர்ச்சிட்டு, இசபெல்லின் புதர்ச்சிட்டு மற்றும் செந்தலைக் கூம்பலகன் பறவைகள் திருப்பூர் மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ளன. இதுவரை கண்காணிக்கப்படாமல் இருந்த சில பறவை இனங்கள், இப்போது கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, திருப்பூர் மாவட் டத்துக்கு புதிய வலசை பறவை கள் வந்திருப்பது பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- இரா.கார்த்திகேயன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close