[X] Close

அரசு பேருந்துகளில் கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டனர்


diwali-government-buses

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 09:41 am
  • அ+ அ-

தீபாவளி பண்டிகையொட்டி சென் னையில் இருந்து கடைசி நேரத்தில் நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகளில் கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். மேலும், முன்பதிவு டிக்கெட் 20 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்று (நவ.6-ம் தேதி) கொண்டாடவுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையிலேயே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். இதனால் பகலில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதேபோல் அண்ணா சாலை, பூவிருந்த வல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் குறை வாகவே இருந்தது. இதற்கிடையே, மக்கள் கூட் டத்துக்கு ஏற்றவாறு கோயம்பேடு மற்றும் இதர தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. 2,032 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகள் இயக்க திட்ட மிடப்பட்டு இருந்தது. ஆனால், பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் அதற்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் கோயம்புத்தூருக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றிலும் கூட்ட நெரிசல் இன்றி மக்கள் பயணித்தனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறிய தாவது:

தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதால், பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி சீராக சென்றனர். ஏற்கெனவே அறிவித்தப்படி, சென்னையில் இருந்து மொத்தம் 11,600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் நேற்று அதிகளவில் பயணம் செய்தனர்.

சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே இதுவரையில் மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த தீபாவளிக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் பேர் அரசு பேருந்துகளில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். ஆனால், அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தது 20 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையே, வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்களில்..

தென்மாவட்டங்களுக்கு செல் லும் பொதுமக்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. அதேபோல புறநகர் ரயில்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் இருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close