[X] Close

3-வது நாளாக பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்: சென்னையில் இருந்து 3,817 பேருந்துகள் இயக்கம்


diwali-buses-crowd

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 10:27 am
  • அ+ அ-

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, வட மாவட்ட மக்கள்நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர்.

தீபாவளி பண்டிகை நாளைகொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து கடந்த சில நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால், கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களிலும், ரயில்நிலையங்களிலும், கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும், கடந்த 2 நாட்களை விட அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருந்தது.

இதற்கிடையே, மக்கள் கூட்டம்வரவர, கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர், மாதவரம்,பூந்தமல்லி பேருந்து நிலையங் களில் இருந்து அரசுப் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன.மக்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 1,542 சிறப்பு பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன. சென்ட்ரல் மற்றும்எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன், 3-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

விரைவுரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:தீபாவளியையொட்டி கடந்த சில நாட்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சீராக சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

சென்னையில் இருந்து நேற்று மட்டும் 3,817 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர்.சென்னையில் இருந்து அரசுப்பேருந்துகளில் மட்டுமே இதுவரையில் மொத்தம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் மூலம் அரசுக்கு ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.1,542 சிறப்பு பேருந்துகள்சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,700 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக் கும், கோயம்புத்தூருக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படவுள்ளன.போக்குவரத்து மாற்றம்தீபாவளி பண்டிகையை ஒட்டிபோக்குவரத்து மாற்றம், போலீஸாரின் சிறப்பாக பணி காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் சீராகச் சென்றன. பண்டிகை காலங்களில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் தென், வட மாவட்டங்கள் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடச் செல்வது வழக்கம்.

இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் பண்டிகை காலங்களில் கடுமையான நெரிசல் காணப்படும். இதனால் வாகன ஒட்டிகள் விடிய விடிய சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரபோலீஸார், காஞ்சிபுரம் மாவட்டகாவல் துறை, மற்றும் போக்குவரத்து துறை இணைந்து ஜி.எஸ்.டி சாலையில் நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.மேலும், பண்டிகைக்கு முன்பு3 நாட்கள் விடுமுறை இருந்ததால், மக்கள் படிப்படியாக சொந்த ஊருக்குச் சென்றனர். மேலும், 5 இடங்களில் இருந்து தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து போலீஸாரைக் கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் ஆம்னி மற்றும் அரசு பேருந்துக்கு தனி பாதை ஒதுக்கப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகனஒட்டிகள் நிம்மதியடைந்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close