[X] Close

களைகட்டிய இறுதிக் கட்ட விற்பனை: விழாக்கோலம் பூண்ட தி.நகர், புரசை, வண்ணை


readymade-business

தீபாவளியை முன்னிட்டு பெரிய கடைகள் மட்டுமல்லாமல், சிறு கடைகளும் களைகட்டியுள்ளன. சென்னை தி.நகரில் உள்ள சாலையோரக் கடைகளில் ஆடை விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.படம்: க.ஸ்ரீபரத்

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 10:10 am
  • அ+ அ-

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், நேற்று இறுதிக்கட்ட வியாபாரம் களை கட்டியது. தி.நகர், புரசை வாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்குத் தேவையான ஜவுளிகள், ஆடைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். இதனால், அந்த இடங்கள் திருவிழாக்கோலம் பூண்டன.

தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பனகல்பார்க் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல், ஸ்வீட் கடைகள், செல்போன் கடை களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேசமயம், நகைக் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

தலைதீபாவளி கொண்டாடு பவர்கள் மற்றும் தீபாவளி நகைச் சீட்டு கட்டியவர்கள் மட்டுமே நகை வாங்க கடைகளுக்கு வந்தனர்.

20% விற்பனை குறைவு

தி.நகரில் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்து வரும் கணேஷ் என்ற வியாபாரி கூறும்போது, “ஜிஎஸ்டி வரி மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் வியாபாரத்தை விட 20 சதவீத விற்பனை குறைந் துள்ளது. அதேபோல், வாகனங் களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாததாலும் கூட்டம் குறைந்துள்ளது. எனினும், கடைக்கு நேரில் வந்து வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் ஓரளவுக்கு நன்றாக உள்ளது” என்றார்.

இதேபோல், நடைபாதையில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் மணி என்பவர் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் துணி வாங்க முதல் சாய்ஸ் தி.நகர் தான். ஆனால், தற்போது பெரிய கடைகளின் கிளைகள் எல்லாம் புறநகர் பகுதிகளில் திறக்கப் பட்டுள்ளதால் தி.நகருக்கு வரும் கூட்டம் சற்று குறைந்துள்ளது. எனினும், எங்களைப் போன்ற நடைபாதை வியாபாரிகளுக்கு வழக்கம் போல வியாபாரம் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

எண்ணற்ற டிசைன்கள்

அம்பத்தூரில் இருந்து தி.நகருக்கு துணி எடுக்க வந்த பிரகாஷ் என்பவர் கூறும்போது, “எங்கள் வீட்டு அருகிலேயே பெரிய பெரிய துணிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தி.நகரில் வந்து துணி எடுத்தால் விலை குறைவாக இருப்பதோடு எண்ணற்ற டிசைன்களில் நாம் விரும்பிய வகைகளில் ஆடைகள் கிடைக்கின்றன. துணிகளைப் பொறுத்தவரை நான் ஆன்லைனில் வாங்குவது இல்லை” என்றார்.

பெருங்குடியில் இருந்து தி.நகருக்கு துணி எடுக்க தனது குடும்பத்தினருடன் வந்திருந்த குடும்பத் தலைவி கீதா கூறும்போது, “எங்கள் பகுதியிலேயே ஏராளமான கடைகள் உள்ளன. எனினும், தி.நகருக்கு வந்தால்தான் ஜவுளிகள் மட்டுமின்றி தங்க நகைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட் களும் ஒரே இடத்தில் வாங்க முடியும். அத்துடன், இங்கு விலை குறைவாக இருப்பதோடு, அதிக அளவு டிசைன்களும் உள்ளன” என்றார்.

வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் பல முன்னணிக் கடை களில் மக்கள் வரிசையில் நின்று துணிகளை வாங்கிச் சென்றனர்.

புரசைவாக்கம் பகுதியில் நேற்று காலை முதலே தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியது. அங்குள்ள பிரபல துணிக்கடைகள், வணிக வளாகங்கள், இனிப்பு கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு விற்பனையில் பொருட்களை மக்கள் குடும்பத் தோடு வந்து வாங்கிச் சென்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close