[X] Close

தீபாவளி மருந்து தயாரிப்பது இப்படித்தான்!


diwali-legiyam

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 17:58 pm
  • அ+ அ-

தீபாவளி மருந்து தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

 

    * சுக்கு – 1 துண்டு

    * சீரகம் – 2 1/2 அரை மேசைக்கரண்டி

    * மிளகு - 2 மேசைக்கரண்டி

    * தனியா(மல்லி) - 2 1/2 அரை மேசைக்கரண்டி

    * ஓமம் – ரு கப் (சுமார் 25 கிராம்)

    * கிராம்பு - 2

    * ஏலக்காய் – 2 சித்தரத்தை - 10 கிராம்

    * நெய் – ஒரு கப்

    * வெல்லம் – 100 கிராம்(அரைத்த விழுதின் அளவிற்கு சமமாக வெல்லத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்)

செய்முறை:

மருந்து சாமான்களை நன்றாக இடித்து நொறுக்கி எடுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அம்மியில் வைத்து, அந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொண்டு சுமார் லு கப் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்துக் கொண்டு, மண் சட்டியில் வைத்து, கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளை போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்டு வந்தபின் இறக்கவும். சிறு தேங்காய் அளவு லேகியத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் தேவைப்படும்.

இனி தீபாவளி மருந்தோடு வயிறும், மனமும் திருப்தி அடையும் வரை தீபாவளி பலகாரங்களை உண்டு மகிழலாம். முடிந்தால் உங்கள் பலகார வகைகளோடு சேர்த்து இந்த மருந்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close