[X] Close

தீபாவளி மருந்து!


diwali-marundhu

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 17:42 pm
  • அ+ அ-

 தீபாவளி நெருங்கிவிட்டது. இனி வீட்டுக்கு வீடு விருந்துப் பட்டியல் தயாராகி கொண்டிருக்கும். தீபாவளி மெனுவை வீட்டில் செய்யப் போகிறோமா அல்லது கடையில் வாங்கப் போகிறோமா என்பது அவரவர் தனிப்பட்ட வசதியைப் பொருத்தது. ஆனால் பலகாரம் இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

   பொதுவாக விழாக்காலங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரம் கொண்ட தின்பண்டங்களை பலகாரம் என்கிறோம். இதை வெறும் ஒரு உணவாக மட்டும் பார்க்க முடியாது. அன்பு, சுவை, திருப்தி, பக்தி, கொண்டாட்டம் என பலவகையான உணர்வுகளை உள்ளடக்கியது இந்தப் பலகாரம். நண்பர்களுடன், உறவினர்களுடன், அக்கம் பக்கத்து வீட்டாருடன் இருக்கும் மனகசப்புகளை இந்த இனிப்பைக் கொடுத்து சரிசெய்துவிடலாம்.

  தீபாவளி அன்று வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய பலகார வகைகளை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அன்றைய தினம் முழுவதும் வெளுத்து வாங்கி விடுகிறோம். பாவம் அந்த வாயில்லாத ஜீவன், அதாங்க வயிறு... என்ன பாடுபடும் என்பதை அன்றைய இரவு அல்லது அடுத்த நாள்தான் நாம் உணரும் நிலையில் இருப்போம். மருந்து மாத்திரை என மேலும் வயிற்றை புண் ஆக்காமல், எப்பேர்ப்பட்ட பலகாரங்களையும் ஜீரணிக்க வைக்கக்கூடிய தீபாவளி மருந்தை உண்டால் நலமோடு வாழலாம்.

 எதற்கு தீபாவளி மருந்து

நம் தாத்தா பாட்டி காலத்தில் எண்ணெய்க் குளியலும், தீபாவளி மருந்தும் கொண்டதே முழுமையான தீபாவளி. நம் முன்னோர் கொடுத்திருக்கும் இந்த பாரம்பரியமான மருந்தை இன்று நாம் மறந்து விட்டோம்.

 தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு அளவில்லாமல் பலகாரங்களை உண்பதால் தொண்டைப் பிரச்னை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இம்சை செய்யும். மேலும் பட்டாசுப் புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்வதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

ஆகவே, தீபாவளிக் கொண்டாட்டத்தில், தீபாவளி மருந்தை மறந்துவிடாதீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close