[X] Close

இனிப்பு தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு: தரம் இல்லையெனில் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்


diwali-sweets

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 10:47 am
  • அ+ அ-

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, விதிகளின்படி உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் 5 குழுக்கள அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள், சில்லறை விற்பனைக் கடைகளில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

இதுவரை மொத்தம் 155 சில்லறை விற்பனைக் கடைகள், 49 பெரிய கடைகளில் ஆய்வு செய்துள்ளோம். இதில், அதிக கலர் கலந்த 68.5 கிலோ இனிப்பு வகைகள், தயாரிப்பு நிறுவன முகவரி, தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய லேபிள் இல்லாத 13 கிலோ உணவுப் பொருட்கள், 35 லிட்டர் பழைய எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளன. முறையான உரிமம் இல்லாத, சுகாதாரமற்ற நிலையில் இருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடைகளில் இருந்து 4 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கடை உரிமையாளர்களிடம், ‘உணவுப் பாதுகாப்பு உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருட்களை தயாரிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே கலர் பயன்படுத்த வேண்டும். பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளோம். தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close