[X] Close

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில்களில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்


peoples-went-to-hometown-for-diwali

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் நேற்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. இதில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளாக இணைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகம் இல்லாத நிலையில் பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:39 am
  • அ+ அ-

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 2-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மொத்தம் 7 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை தங்கள் சொந்தஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால்  முக்கிய பேருந்து நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களிலும் நேற்று காலை முதல் மக்கள்கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பேருந்துகள், ரயில்கள் மட்டுமின்றிகார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால்  அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தம் 9 நடைமேடைகள் அமைக்கப்பட்டு அரசு பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டன.  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்தும்அரசு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் காரணமாக  வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 1,300 சிறப்பு பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன.

இதேபோல், சென்ட்ரல் மற்றும்எழும்பூர், தாம்பரம்  ரயில் நிலையங்களில் இருந்து  தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட் டன. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், கோயம்புத்தூருக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டன. விரைவு ரயில்களில்  முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.  கடைசி நேரத்தில் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் ஆம்னி, அரசு பேருந்துகளில் பயணம் செய்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறிய தாவது:

தீபாவளியொட்டி, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  மக்கள் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியதால், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 1,300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரையில் அரசு பேருந்துகளில் மட்டுமே சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பாக்கிறோம்.  சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,817 பேருந்துகளும், நாளை 1700 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகளும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

கடந்த 3 நாட்களில் ரயில்கள் மூலம் 3.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து  ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, “தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள் நிரம்பின.  முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்குவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம்அதிகமாக இருந்தது. தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டசிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டன. வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத் துள்ளோம். அதுபோல், திருநெல் வேலிக்கும், கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களில்  சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் மட்டுமே சுமார் 3.50 லட்சம் பேர்  புறப்பட்டு சென்றுள்ளனர்’’ என்றனர்.

அதிகாரி தகவல்

போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீபாவளியொட்டி அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்கள் என கணக்கிடும் போது, கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புறப்பட்டு சென்றிருப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close