[X] Close

தீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்


forgery-work-during-diwali-purchase

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:32 am
  • அ+ அ-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை களைத் தடுக்க போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் வெளிமாவட்ட, மாநில மக்கள் சொந்த ஊரில் தீபாவளியைக் கொண்டாட புறப் பட்டுவிட்டனர். ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலமும் செல்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர் புறப் பட்டுள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக் கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. நெரிசலைப் பயன் படுத்தி பணம், நகை திருட்டில் சிலர் ஈடுபட வாய்ப்புள்ளது. இவர்களை தீவிரமாகக் கண் காணிக்க சென்னை காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.

அதன்படி மக்கள் அதிகமாகக் கூடும் கோயம்பேடு, மாதவரம், தாம் பரம், தாம்பரம் சானட்டோரியம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம் பரம் ரயில் நிலையங்களிலும் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது.

சாதாரண உடை அணிந்து மக்க ளோடு மக்களாகக் கலந்து ஆண் மற்றும் பெண் போலீஸார் கண் காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லா மல் சென்னை முழுவதும் 3,000 போலீஸார் தீபாவளி பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தற்போது தீபாவளிக்காக கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

அதனால் அங்கெல்லாம் வழக் கத்தைவிட அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புப் பணிக் காக நிறுத்தப்பட்டுள்ளனர். கண் காணிப்பு கேமராக்கள், சிறியவகை ஆள் இல்லா விமானம், கண் காணிப்பு கோபுரங்களில் நின்ற வாறும் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close