[X] Close

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


diwali-special-buses

  • kamadenu
  • Posted: 03 Nov, 2018 11:08 am
  • அ+ அ-

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உட்பட 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்புஇணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னையில் இருந்து இன்றுமுதல் 5-ம் தேதி வரையில் மொத்தம் 11,367 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகளை கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் ஆகிய 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் உயர் நீதிமன்றம், திருவொற்றியூர், கோயம்பேடு, வேளச்சேரி. திருவான்மியூர், பூந்தமல்லி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து மேற்கண்ட பேருந்து நிலையங்களுக்கு 250 இணைப்பு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையில் 24 மணிநேரமும் இயக்கப்படும்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close