[X] Close

பீட்ருட் வடை


beetroot-vadai

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 15:54 pm
  • அ+ அ-

என்னென்ன தேவை?

பீட்ருட் - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

மிளகாய் வற்றல் - 2

இஞ்சி - சிறு துண்டு

கொத்தமல்லி, கறிவேப்பிலை -சிறிதளவு

கடலைப் பருப்பு -1 கப்

அரிசி - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள். அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பு ஊறியதும் தண்ணீரை வடித்து ஏற்கெனவே அரைத்துவைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத் தூள், துருவிய பீட்ருட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை வட்டமாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close