[X] Close

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 1.13 லட்சம் பேர் முன்பதிவு: அரசு பேருந்துக்கு சுங்கச்சாவடியில் தனி பாதை; போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

minister-vijaybhaskar-interview-about-diwali

தீபாவளி பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை அரசு இயக்குகிறது. தீபாவளி சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகருக்கு வெளியே தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் செயல்படத் துவங்கும் பேருந்து நிலையம் அரசு பஸ், தனியார் பஸ் என தனித்தனியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.படம்:எம்.முத்துகணேஷ்

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 13:17 pm
  • அ+ அ-

சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 1 லட்சத்து 13 ஆயிரம்பேர் முன்பதிவு செய்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது என்றுஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீபாவளிக்காக சென்னையில் இருந்துசொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக, 5-வது ஆண்டாக தமிழக போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கோயம்பேடு மட்டுமின்றி, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலையபேருந்து நிலையம், சானட்டோரியம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்தும்வெளியூர் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும்.

ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து இந்த ஆண்டு 11,367 பேருந்துகள் வரும் 3, 4,  5 தேதிகளில் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இதுவரை 1 லட்சத்து12 ஆயிரத்து 989 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 30 முன்பதிவுமையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி வரை சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு தனிவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைக்கு முடிவுகள் எட்டப்படுமா?

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை ரூ.650  கோடிக்கானநிதியை பெற்று அறிவித்துள்ளோம்.வியாழக்கிழமை அன்று போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அதேபோல, 4 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான தொகையை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிதிநிலை சரியானதும்படிப்படியாக நிலுவைத் தொகைகள்வழங்கப்படும்.

தொமுச மற்ற சங்கங்களைப் போராட்டத்துக்கு அழைத்துள்ளதே?

அவர்கள் பொங்கலின்போது போராட்டம் நடத்தினர். மக்கள் இதை கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். தொழிலாளர்கள் நிச்சயமாக போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். இதுவரை இல்லாத வகையில் போக்குவரத்துக் கழகங்களில் ஏழரை ஆண்டுகளில் ரூ.13,000  கோடி வழங்கியுள்ளோம்.

வேலைநிறுத்தம் என்பது தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்கள் தங்கள்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான வேலை. தொழிலாளர்கள் மக்களின் சிரமங்களைப் பார்த்து வேலைநிறுத்த முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் ஏன் உயர்ந்து வருகிறது?

ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அவர்கள் மக்கள் நெருக்கடி அதிகரிக்கும்போது,  கட்டணத்தை உயர்த்துகின்றனர். மற்ற நேரங்களில் அரசு கட்டணத்தைவிட பாதி கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக் கப்பட்டு,  கடந்த ஆண்டு 36 பேருந்து களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில், காலியாக இடம் இருக்கும்போது, ஆம்னி பேருந்துகளை விரும்பிச் செல்பவர்களைத்  தடுக்க முடியாது. அதே நேரம் தேசிய அளவில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க இடமில்லை. இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition

[X] Close