[X] Close

காதலிக்க மறுத்ததால் பெண்ணின் படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட இளைஞர் கைது


techie-held-for-attacking-woman

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Mar, 2018 11:36 am
  • அ+ அ-

தன்னை காதலிக்க மறுத்ததால் பெண்ணின் படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட இளைஞர் ஒருவரை சென்னை மாங்காடு காவல்துறையினர் கைது செய்தனர்.


ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் வேங்கட சேஷய்யா சாத்விக் (24). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பெண்ணை விரும்பியுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் சொந்த ஊர் விஜயவாடா. இருவருக்கும் இடையே பரஸ்பரம் காதல் மலர்ந்துள்ளது.

ஆனால், சில நாட்களிலேயே காதலி திடீரென்று தன்னைவிட்டு விலக அவரைக் கேள்விகளால் துளைத்துள்ளார் சாத்விக். அப்போது அந்தப் பெண், "உனது நடத்தையில் எனக்கு சந்தேகம் உள்ளது. இனிமேல் நாம் நமது உறவைத் தொடர முடியாது" என வெளிப்படையாகவேக் கூறியிருக்கிறார்.


ஆனால், சாத்விக் அப்பெண்ணை அப்படியே விட்டுவிடவில்லை. தொடர்ந்து அவரை நச்சரித்துள்ளார். அத்துடன் நிற்காமல், அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அதை ஆபாச புகைப்படங்களாக்கி சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.


இதனால், பதறிப்போன அந்தப் பெண் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீஸார் சாத்விக்கின் பென் ட்ரைவ், மொபைல் போன்களை சோதித்தபோது அவற்றில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.


இதற்கிடையில், இந்த வழக்கிலிருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் சாத்விக்.


சில நாட்கள் அமைதி காத்த சாத்விக் மீண்டும் சமூக வலைதளங்களில் அப்பெண்ணின் ஆபாசப் புகைப்படத்தை வெளியிட்டார். இதனையடுத்து முகலிவாக்கத்திலிருக்கும் சாத்விக்கின் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் அவரை கண்டித்துள்ளார். ஆனால், சாத்விக்கோ அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார்.


இதனையடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார். தற்போது சாத்விக் மீது 294(பி), 323, 506 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.


கற்றுக் கொடுப்போம்...
காதலிக்க மறுத்தால், இல்லையென்றால் காதலன் தவறானவன் என்பதைத் தெரிந்துகொண்டு அவனைப் புறக்கணித்தால் என்னவெல்லாம் ஒரு பெண்ணுக்கு நேரும் என்பதை ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் போலிருக்கிறது. புறக்கணிப்பும் அன்பைப் போன்று இயல்பான உணர்வே என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத இளைஞர்கள் தன்னையும் வருத்தி பிறரையும் துன்பத்துக்குள்ளாகும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தைக்கு தோல்வியை, புறக்கணிப்பை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close