[X] Close

காவேரிப்பாக்கத்தில் பள்ளி வேனின் கதவு மோதி சிறுவன் பலி


kaveripakkam-sarveen-kumar

சர்வீன் குமார்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 16:28 pm
  • அ+ அ-


 
காவேரிப்பாக்கத்தில் தனியார் பள்ளியின் வேன் கதவு மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘காவேரிப்பாக்கம் சோமநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (29). இவரது மகன் சர்வீன் குமார் (6). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தனியார் பள்ளி வேன் ஒன்று அவரை கடந்து சென்றது. வேன் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது வேனின் கதவு திடீரென வெளிப்பக்கம் திறந்து சிறுவன் சர்வீன் குமார் மீது வேகமாக மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சர்வீன் குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து, காவேரிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்’’ என்றனர்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close