[X] Close

பென்னாகரம் அருகே பள்ளிப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி


pennagaram-sirumi-death

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 15:25 pm
  • அ+ அ-

பென்னாகரத்தைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் மகள் நேஷ்திகா (13). இவர் பென்னாகரம் நெடுஞ்சாலையை ஒட்டி சோகத்தூர்-ஆட்டுக்காரன்பட்டி இடையே செயல்படும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று மாலை பள்ளி முடித்து பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். பேருந்தை கெட்டூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். நல்லாம்பட்டி கிராமத்தில் குழந்தைகளை இறக்கி விட பேருந்து சென்றுள்ளது. அப்போது சாலை வளைவு ஒன்றில் எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து அந்த மாணவி கீழே தவறி விழுந்துள்ளார். உடனே வாகனத்தின் பின் சக்கரம் மாணவியின் மீது ஏறியதில் தலை நசுங்கி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close