[X] Close

ஸ்ரீரங்கத்தில் பாட்டி கொலை வழக்கில் பேரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து: மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு


srirangam-grandama-murder

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 14:47 pm
  • அ+ அ-

 

திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவைச் சேர்ந்த அயன்ராஜ் மனைவி மாரியாயி (90). தனக்குச் சொந்தமான வீடுகளிலிருந்து கிடைக்கும் வாடகைப் பணத்தை வைத்து மாரியாயி வாழ்க்கை நடத்தி வந்தார்.

மாரியாயியின் மகன் நாகப்பனின் மகன் சுதாகர் அடிக்கடி பணம் கேட்டு மாரியாயிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17.3.2013 அன்று, மாரியாயி தனது வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மாரியாயியை கொலை செய்ததாக, அவரது பேரன் சுதாகரை ஸ்ரீரங்கம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக இருந்த வேல்முருகன், சுதாகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 12.9.2013-ல் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சுதாகர் மேல்முறையீடு செய்தார். அங்கும் தண்டனை 23.1.2015 அன்று உறுதி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுதாகர் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.அப்துல்நஸீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக்கூறி சுதாகருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close