[X] Close

நெல்லை மீனாம்பாள்புரத்தில் மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை உறுதி: மகள்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவு


nellai-murder-case

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 14:39 pm
  • அ+ அ-

 

நெல்லை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தினமும் போதையில் வந்து மனைவிக்கு தொந்தரவு அளித்தார். இதனை இவரது மகன் சுப்பையா தட்டிக் கேட்டுள்ளார். கடந்த 18.9.2010-ல் சுப்பையா வீட்டு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தங்கவேல், தனது மகன் சுப்பையாவை கொலை செய்ததாக, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தங்கவேலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி 9.10.2015-ல் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து தங்கவேல் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு: பாதுகாக்க வேண்டிய சொந்த மகனேயே மனுதாரர் கொலை செய்தார். இதற்காக மனுதாரருக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும். ஆனால், தற்போது தண்டனை குறித்து முடிவு செய்ய முடியாது. இதனால், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மகனை இழந்த தாய்க்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர் இரு மைனர் மகள்களை வளர்க்க வேண்டியதுள்ளது. 

மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு மனுதாரரின் மனைவிக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் 2 மாதத்தில் ரூ.3 லட்சத்துக்கும் குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரரின் இரு குழந்தைகளின் கல்விக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். அவர்கள் மேஜராகும் வரை மாதம் தோறும் நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close