[X] Close

அரியலூர் அருகே ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 7 ஆண்டுகள் சிறை


ariyalur-vao-prison

மாதிரிப் படம்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 14:21 pm
  • அ+ அ-

 

அரியலூர் அருகே ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துமாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் காலனித்தெருவைச் சேர்ந்த ஆணைமுத்து மகன் அண்ணாதுரை(60). இவர், கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது மகள் விஜயலட்சுமிக்கு திருமண உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் தேவைப்பட்டதால், அப்போது, இலுப்பையூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமரைக்குளம் ராமசாமி (67) என்பவரிடம் சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால், சான்றிதழ் வழங்க ராமசாமி ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாதுரை, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அறிவுரைப்படி, அண்ணாதுரை ரசாயன பவுடர் தடவிய பணத்தை கடந்த 14.10.2004 அன்று ராமசாமியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராமசாமியை பணத்துடன் பிடித்து, கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ராமசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார், ராமசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close