[X] Close

திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 15 பவுன் நகை பறிப்பு


teacher-chain-snatch

மாதிரிப் படம்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 13:45 pm
  • அ+ அ-

 


நாமக்கல் திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் இருந்து 15 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை மல்லசமுத்திரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பிள்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஜெயந்தி (35), தாசப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் பிள்ளாநத்தம் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

காத்தான்காடு அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயந்தி காயமடைந்தார்.

இதையடுத்து அவர் திருச்செங்கோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செயின் பறித்த நபர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை ஜெயந்தியால் அடையாளம் காண முடியவில்லை. சம்பவம் தொடர்பாக மல்ல சமுத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close