[X] Close

மதுரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதல்: பிளஸ் 2 மாணவருக்கு கத்திக்குத்து


2

  • Team
  • Posted: 10 Mar, 2018 11:50 am
  • அ+ அ-

மதுரை மதுரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். 

ஒத்தக்கடை அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் உள்ளிட்ட கலைப்பிரிவுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர். 
காலை 8 மணி அளவில் இருதரப்பு மாணவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இரு மாணவர்கள், திருவாதவூர் அருகே உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அர்ச்சுனனை(17) கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இதில் அம்மாணவர் மயங்கினார். அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: மாணவர்களிடையே பிளஸ்1 படிக்கும்போதே ஒரே மேஜையில் அமருவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு சுண்ணாம்பூர் பகுதி மாணவர் தரப்பில் ஒருவர் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து ஏற்கெனவே விசாரித்துள்ளோம். மாணவர்கள் என்பதால் எச்சரிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழலில் தான் நேற்று கத்திக் குத்து நடந்துள்ளது.

பள்ளி வளாகத்தில் இச்சம்பவம் நடந்ததால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்ப அச்சம் தெரிவித்தனர். எனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடியும் வரை எஸ்.ஐ. ஒருவர் தலைமையில் 4 போலீஸார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார் என்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலூர் போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவரை ஆட்சியர் கொ. வீரராகவராவ் நலம் விசாரித்தார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close